என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி அருகே இன்று பரபரப்பு:  விவசாயியை கொடூரமாக  தாக்கிய காட்டு யானை
    X

    சூளகிரி அருகே இன்று பரபரப்பு: விவசாயியை கொடூரமாக தாக்கிய காட்டு யானை

    • யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட ராயக்கோட்டை வன சரக அலுவலர்கள் முயன்று வருகின்றனர்.
    • சின்னசாமியின் அலறலை கேட்ட அக்கம்பக்கம் இருந்த விவசாயிகள் ஓசை எழுப்பி யானையை விரட்டினர்.

    சூளகிரி,

    சூளகிரி அருகேயுள்ள மேலுமலை பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றி வந்தன. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட ராயக்கோட்டை வன சரக அலுவலர்கள் முயன்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியை ஒட்டியுள்ள சாமல்பள்ளம் சின்னகானப்பள்ளி பகுதியில் விவசாய நிலம் வைத்துள்ள சின்னசாமி (வயது 50) என்பவர் தனது வயலுக்கு வந்தார்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை சின்னசாமியை பயங்கரமாக தாக்கியது. சின்னசாமியின் அலறலை கேட்ட அக்கம்பக்கம் இருந்த விவசாயிகள் ஓசை எழுப்பி யானையை விரட்டினர்.பின்னர் சின்னசாமியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை விவசாயி களும்,பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×