என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் விநியோகம்"

    • ஏரி பகுதியில் அமைத்த ஆழ்துளை கிணறுகள் மூழ்கியது.
    • 3-க்கும் மேற்பட்ட ஆழ் துளை கிணறு ஒரே நாளில் அமைத்து குடிநீர் வழங்கினார்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி பல கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சி. இந்த ஊராட்சியில் உத்தனப்பள்ளி, கனசந்திரம், கூடுமாக்கனப்பள்ளி, லட்சிம்புரம், என பல கிராமங்கள்களுக்கு 5-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் வழங்கி வந்தனர்.

    தற்போது 2 மாதங்களாக தொடர் மழையால் ஏரிகள்,குட்டைகள் நிரம்பியதால் ஏரி பகுதியில் அமைத்த ஆழ்துளை கிணறுகள் மூழ்கியது.

    இதனால் உத்தனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி காந் அரசு திட்ட பணிகள் மூலம் 3-க்கும் மேற்பட்ட ஆழ் துளை கிணறு ஒரே நாளில் அமைத்து குடிநீர் வழங்கினார்.

    இதையடுத்து ஊராட்சி நிர்வாகியையும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சேர்மன், கவுன்சிலர், பொறியாளர், மேற்பார்வையாளர், ஒப்பந்ததாரர் தங்கமணி ஆகியோரை பாராட்டி கனசந்திரம் பகுதி கிராம மக்கள் பூஜை செய்து ஆடு வெட்டி விருந்து அளித்தனர்.

    ×