search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் அருகே தாக்கப்பட்ட பள்ளி மாணவன் சாவு எதிரொலி:  கப்பல்வாடி கிராமத்தில் பதற்றம்; ஏராளமான போலீசார் குவிப்பு
    X

    பர்கூர் அருகே தாக்கப்பட்ட பள்ளி மாணவன் சாவு எதிரொலி: கப்பல்வாடி கிராமத்தில் பதற்றம்; ஏராளமான போலீசார் குவிப்பு

    • கோபிநாத்தை தாக்கிய மாணவனை பிடித்து விசாரித்தனர்.
    • சேலத்தில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சக்கில் நத்தம் அருகே உள்ளது கப்பல் வாடி . இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 -ம் வகுப்பு அறிவியல் பிரிவு படிக்கும் 2 மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இந்த விளை யாட்டின்போது ஒரு மாணவர் மற்றொரு மாணவனின் நெற்றியில் தைலம் தடவி உள்ளான். இதனால் மாணவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் பள்ளியின் சமையல் அறை அருகே அடுப்பு எரிக்க வைக்கப்பட்டு இருந்த தென்னம் பாளையை எடுத்து கோபிநாத் என்ற மாணவனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த கோபிநாத் தாக்கப்பட்ட அதே வேகத்தில் அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார். அவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்கப்பட்ட அதிர்ச்சியில் வலிப்பு நோய் ஏற்பட்டு மாணவன் கோபிநாத் துடித்துள்ளார். இதையடுத்து சக மாண வர்கள் நடந்த சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் கூறி உள்ளனர். உடனே அவர்கள் மாணவனை அங்கி ருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு மாணவன் கோபிநாத்தின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை தாக்கிய மாணவனை பிடித்து விசாரித்தனர். பின்னர் சேலத்தில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாணவன் கோபிநாத்தின் வீடும், அவனை தாக்கிய மாணவனின் வீடும் அருகருகே உள்ளது.இதனால் அந்த கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் பர்கூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×