என் மலர்
நீங்கள் தேடியது "ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கியது"
- ஐ.வி.டி.பி. நிறுவனமானது கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான கல்விச் சேவையை ஆற்றி வருகிறது.
- ரூ.19,520 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி கவுரவித்தார்.
கிருஷ்ணகிரி,
மகளிர் முன்னேற்றத்தில் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பி. நிறுவனமானது கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான கல்விச் சேவையை ஆற்றி வருகிறது. கல்வி ஊக்கப்பரிசுகள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி பயில உதவித்தொகைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் வழங்குவது, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் அமைக்க உதவி புரிதல் போன்ற பல பணிகளைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில், கல்வியில் மட்டுமில்லாமல் அனைத்து செயல்பாடு களிலும் முதன்மை மாணவர் களாகவும், சிறந்த மாணவர்களாகவும் திகழும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட கல்வி குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 11-ம் வகுப்பு மாணவி தேஜா ஸ்ரீ மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சச்சின் சந்துரு ஆகிய இருவருக்கும் தலா.ரூ.19,520 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி கவுரவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஷ்வரி முன்னிலையில் விருதை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி. நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் மாணவ, மாணவியர் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.






