என் மலர்
கிருஷ்ணகிரி
- வருவாய்த்துறை அதிகாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி டிப்பர் லாரிகளை இயக்கினர்.
- 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரட்டகிரி கிராமத்தில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன
இந்த கல்குவாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவா ர்த்தையை அடுத்து பொது மக்கள் போரா ட்டத்தை கைவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் கொரட்டகிரி கிராமத்தின் வழியாக சாலையில் டிப்பர் லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பி ரண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கூறி இருந்தது.
இதையடுத்து நேற்று தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, குமரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி டிப்பர் லாரிகளை இயக்கினர்.
அப்போது கிராமத்தின் வழியாக சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் வழிமறித்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் சென்னை உயர்நீதிமன்ற ஆணையை காட்டி டிப்பர் லாரிகளை இயக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கூறினர்.
ஆனால் பொதுமக்கள் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதி வழியாக டிப்பர் லாரிகள் செல்லாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இன்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதும க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் இந்த போராட்டத்தால் கொரட்டகிரி கிராமத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இரண்டு நாள் டென்னிஸ் போட்டி துவங்கியது.
- 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான இரண்டு நாள் டென்னிஸ் போட்டி துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட டென்னிஸ் அசோசியேசன் சார்பில், இரண்டாவது மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. இதில், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒற்றையர் பிரிவாக நடக்கும் இப்போட்டிகளை மாவட்ட டென்னிஸ் அசோசியேசன் தலைவர் யுவராஜ், தானம்பட்டி சுகாதார ஆய்வாளர் கலைவேந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் போஜிராஜ்வர்மா கலந்து கொண்டார்.
இதற்கான இறுதிப் போட்டி இன்று (30ம் தேதி) நடக்கிறது.
- கெலமங்கலம் வட்டார மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- தோல நோய், நீரிழிவு நோய், ரத்த பரிசோதனை, உள்ளி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போக்குவரத்து கிளை பணிமனையில் கெலமங்கலம் வட்டார மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு துணை இயக்குநா சுகாதார பணிகள் மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா ராஜேஷ்குமார் தலைமையில் பயிற்சி மருத்துவ அலுவலா விமல, மருத்துவர்கள் சகதிவேல், சுதா, சாரதா, பல் மருத்துவர் லட்சுமி, நடமாடும் மருத்துவ குழுவினர் தினேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தேன்கனிக்கோட்டை போக்குவரத்து கிளை பணிமனை ஓட்டுனர், நடத்துனர். தொழில்நட்ட பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 200 பணியாளர்களுக்கு கண், காது, முக்கு, தொண்டை தோல நோய், நீரிழிவு நோய், ரத்த பரிசோதனை, உள்ளி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் கிளை மேலாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை தபால் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.
இவரது மனைவி லட்சுமி (வயது 41). இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த லட்சுமி சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமணி ஒன்றில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இது குறித்து லட்சுமியின் சகோதரர் அஞ்சப்பா கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களையும், சிறு வியாபாரிகளையும் சேர்த்து பணம் வசூல் செய்து வந்துள்ளார்.
- ரூ.1 கோடி சுருட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் ஓம் சக்தி கோவில் அருகில் 3-வது தளத்தில் சென்னை ஆவடியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிதி நிறுவனத்தில் தினசரி, வாராந்திர, மாதாந்திர சீட்டுகள் நடத்த ப்படுவதாகவும், கவர்ச்சி கரமான திட்டங்களை கூறி பொதுமக்களையும், சிறு வியாபாரிகளையும் சேர்த்து பணம் வசூல் செய்து வந்துள்ளார்.
இதில் பர்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்ப ட்டவர்கள் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பணம் வசூல் செய்யும் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பணம் வசூலிக்க வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்திற்கு வந்து பார்த்தனர்.
அப்போது அந்த நிறுவனத்தை காலி செய்து விட்டு சென்று விட்டது தெரியவந்தது.இந்த சம்பவம் சீட்டு பணம் கட்டி வந்த பொதுமக்களுக்கு காட்டுத்தீயாக பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணம் முதலீடு செய்த பொதுமக்கள் நிதி நிறுவனத்தின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது நிதி நிறுவனத்தில் பர்கூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு போட்டு வந்தோம். சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கட்டினோம். கடந்த ஒரு மாதமாக ஊழியர்கள் சீட்டு பணம் வசூலிக்க வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து வந்து பார்த்தபோது நிதி நிறுவனத்தை அவர்கள் காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
நாங்கள் கட்டிய சீட்டு பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க வலியுறுத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் மீது புகார் கொடுங்கள்.
விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர் இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீசார் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி சுருட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க.அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
- தி.மு.க. உறுப்பினர்களும் தங்கள் வார்டு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா மாமன்ற கூட்டரங்கில், நடைபெற்ற இக்கூட்டதிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மேயர் சத்யா, ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகரப்பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கிய முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க.அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
தொடர்ந்து மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன் (அ.தி.மு.க) மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நிலவும் அவலங்கள் குறித்து பேச முற்பட்டார்.
இதற்கு, தி.மு.க. உறுப்பினர்கள் நாகராஜ், அரசனட்டி ரவி, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட வார்டுகளை பற்றி மட்டுமே பேச வேண்டும், மற்ற வார்டு பிரச்சினைகளில் தலையிடக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனால் அவையில் தி.மு.க.மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல், குழப்பம் நிலவியது.
இதன் காரணமாக அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மேயர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்த பின் கூட்டம் தொடர்ந்தது.
இதில் பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னீரப்பா, மாதேஸ்வரன் ஆகியோர் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் துப்புரவு பணியை, சிறப்பாகவும் செம்மையாகவும் மேற்கொண்டு வரும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினர்.
கூட்டத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் சத்யா பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.
மாநகராட்சி 4 மண்டலங்களுக்கான அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். மாநகராட்சி கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.
3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தலாம் என்று விதிமுறை உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் கூட்டத்தில், ஜெயப்பிரகாஷ், மஞ்சுநாத், முருகம்மாள் மதன் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களும், மற்றும் தி.மு.க. உறுப்பினர்களும் தங்கள் வார்டு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
கூட்டத்தில் 199 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.
- ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த 2 ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம், தப்பி ஓடிய அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 52), மல்லேஷ் (60) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இதே போல ராயக்கோட்டை பகுதியில் போலீசாரைக்கண்டதும் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்த அம்மா பூங்கா பகுதியை சேர்ந்த முத்து (45), கெலமங்கலம் பகுதியில் போலீசாரை கண்டதும் லாட்டரி சீட்டுகளை வீசிவிட்டு ஓட்டம் பிடித்த ஆஞ்சநேயர்கோவில் பகுதியை சேர்ந்த விஜி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- காட்டு யானைகள் சேதாரம் செய்யாத வண்ணம் மின்வேலி அமைத்து தர வேண்டும்.
- சிறப்பு முகாம் அமைத்து நோய்க்கான தடுப்பூசியினை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரணக் கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மலையோர கிராம மக்களின் விசவசய பயிர்களை காட்டு யானைகள் சேதாரம் செய்யாத வண்ணம் மின்வேலி அமைத்து தர வேண்டும்.
காட்டு யானை தாக்கி இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதை உயர்த்தி வழங்கிட வேண்டும். கிராமப்புற மக்கள் வளர்க்கும் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காதவாறு சிறப்பு முகாம் அமைத்து நோய்க்கான தடுப்பூசியினை வழங்க வேண்டும்.
ஓசூர் மற்றும் கெலமங்கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாடா கம்பெனியில் வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த படித்த ஆண், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட ஊராட்சி குழு அலுவலக செயலர் சாந்தா, உதவியாளர் சத்தியவதி, இளநிலை உதவியாளர் சரவணன், செந்தாமரை செல்வி மற்றும் 19 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- சப்- கலெக்டர் சரண்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பொதுமக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட முனீஸ்வரன் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சப்- கலெக்டர் சரண்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் இருப்பு குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு தனி தாசில்தார் பெருமாள் உடன் இருந்தார்.
- கிணற்றின் ஒட்டியவாறு மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்தது.
- மாடு அலறும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் அருகேயுள்ள புது மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் மகன் சக்தி விவசாயியான இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் விவசாய கிணறு உள்ளது.
இந்த கிணற்றின் அருகே இன்று காலை மேய்ச்சலுக்காக கறவை மாடு ஒன்றை கட்டியுள்ளார். இதில் கிணற்றின் ஒட்டியவாறு மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்தது.
இதில் மாடு அலறும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பசு மாட்டை மீட்கும் முயற்சி பலனளிக்காத நிலையில் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் கயிற்றைக் கட்டி பசுமாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
காலை வேளையில் பசுமாடு கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
- பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் தாமதமாக தொடங்கினாலும், தரமாக வழங்கப்படும்.
- சேலைகள் 15 வடிவமைப்புகளிலும், வேட்டி 5 வடிவமைப்புகளில் வழங்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். ஓசூர் எம்எல்ஏ., பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, தண்ணீரை திறந்து வைத்து, தண்ணீரை பூக்களை தூவி வரவேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் இரண்டாம் போக விவசாயத்திற்கு நல்ல ஆலோசனைகளை வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் பெற்று, உரிய காலத்தில் நடவு செய்து நல்ல மகசூலை பெறவேண்டும்.
மேலும், விவசாயிகளுக்கு தேவையான ஜிங்க் சல்பட், உரங்கள் உள்ளிட்டவை தேவை, இருப்பு உள்ளிட்ட விவரங்கள் விவசாயிகள் அதற்கான இணையதளம், செல்போன் செயலிகள் வழியாக தெரிந்துக் கொள்ளலாம். தனியாரைவிட நெல்லுக்கு கூடுதல் விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்கிறது.
விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் தாமதமாக தொடங்கினாலும், தரமாக வழங்கப்படும். சேலைகள் 15 வடிவமைப்புகளிலும், வேட்டி 5 வடிவமைப்புகளில் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) குமார், வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவிபொறியாளர் காளிப்பிரியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பிடிஏ தலைவர் நவாப்,
பேரூராட்சி தலைவர்கள் தம்பிதுரை, அம்சவேணி செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, கோவிந்தன், தனசேகரன், அன்பரசன், சுப்பிரமணி, பாபு, குமரேசன், கதிரவன், சித்ராசந்திரசேகர், அஸ்லாம், நாகராசன், கிருபாகரன், ஆனந்தன், மகேந்திரன், டேம்.பிரகாஷ், கவுரப்பன், பானுப்பிரியா நாராயணன், செல்வி வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.
- 300- க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட அணிகளின் தலைவர், துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.
ஓசூர் - தளி சாலையில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மற்றும் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் பி.முருகன், ஒய்.சின்னசாமி, புஷ்பா சர்வேஷ், ஓசூர் மாநகர செயலாளரும்,மேயருமான எஸ்.ஏ.சத்யா,
மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுமார் 300- க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடைபெற்றது.






