என் மலர்
நீங்கள் தேடியது "பசு மாடு உயிருடன் மீட்பு"
- கிணற்றின் ஒட்டியவாறு மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்தது.
- மாடு அலறும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் அருகேயுள்ள புது மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் மகன் சக்தி விவசாயியான இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் விவசாய கிணறு உள்ளது.
இந்த கிணற்றின் அருகே இன்று காலை மேய்ச்சலுக்காக கறவை மாடு ஒன்றை கட்டியுள்ளார். இதில் கிணற்றின் ஒட்டியவாறு மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்தது.
இதில் மாடு அலறும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பசு மாட்டை மீட்கும் முயற்சி பலனளிக்காத நிலையில் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் கயிற்றைக் கட்டி பசுமாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
காலை வேளையில் பசுமாடு கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.






