என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் காந்தி பேட்டி"

    • பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் தாமதமாக தொடங்கினாலும், தரமாக வழங்கப்படும்.
    • சேலைகள் 15 வடிவமைப்புகளிலும், வேட்டி 5 வடிவமைப்புகளில் வழங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். ஓசூர் எம்எல்ஏ., பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

    இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, தண்ணீரை திறந்து வைத்து, தண்ணீரை பூக்களை தூவி வரவேற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் இரண்டாம் போக விவசாயத்திற்கு நல்ல ஆலோசனைகளை வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் பெற்று, உரிய காலத்தில் நடவு செய்து நல்ல மகசூலை பெறவேண்டும்.

    மேலும், விவசாயிகளுக்கு தேவையான ஜிங்க் சல்பட், உரங்கள் உள்ளிட்டவை தேவை, இருப்பு உள்ளிட்ட விவரங்கள் விவசாயிகள் அதற்கான இணையதளம், செல்போன் செயலிகள் வழியாக தெரிந்துக் கொள்ளலாம். தனியாரைவிட நெல்லுக்கு கூடுதல் விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்கிறது.

    விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் தாமதமாக தொடங்கினாலும், தரமாக வழங்கப்படும். சேலைகள் 15 வடிவமைப்புகளிலும், வேட்டி 5 வடிவமைப்புகளில் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) குமார், வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவிபொறியாளர் காளிப்பிரியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பிடிஏ தலைவர் நவாப்,

    பேரூராட்சி தலைவர்கள் தம்பிதுரை, அம்சவேணி செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, கோவிந்தன், தனசேகரன், அன்பரசன், சுப்பிரமணி, பாபு, குமரேசன், கதிரவன், சித்ராசந்திரசேகர், அஸ்லாம், நாகராசன், கிருபாகரன், ஆனந்தன், மகேந்திரன், டேம்.பிரகாஷ், கவுரப்பன், பானுப்பிரியா நாராயணன், செல்வி வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×