என் மலர்
கிருஷ்ணகிரி
- பழக்கடைகளை வைத்தும், தள்ளுவண்டியிலும் சிறு வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வந்தனர்.
- இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
ஓசூர்,
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதான சாலையிலிருந்து அரசனட்டிக்கு செல்லும் வழி மற்றும் சிப்காட் ஹவுசிங் காலனிக்கு செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமிப்பு செய்தவாறு, பெட்டிக் கடைகள், சாலையோர சிறு ஓட்டல்கள், பழக்கடைகளை வைத்தும், தள்ளுவண்டியிலும் சிறு வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வந்தனர்.
இதனால், இப்பகுதி மக்கள் அந்த சாலைகளில் சென்று வர மிகவும் அவதிப்பட்டனர். தவிர, இந்த சாலைகள் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றதையடுத்து, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், நேற்று அந்த பகுதியில், மாநகராட்சி அலுவலர்கள் பிரபாகரன், குமார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி,ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் போலீசார் குவிக்கப்படிருந்தனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
பின்னர், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ஓசூர் மாநகராட்சி பகுதியில்,இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
- சிமெண்ட். ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்து விட்டது..
- சிமெண்ட். ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்து விட்டது..
ஓசூர்,
ஓசூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் (ஹோசியா) சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம் நேற்று ஓசூரில் நடைபெற்றது. பின்னர், சங்க தலைவர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கட்டுமான பொருள்களான சிமெண்ட். ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்து விட்டது.. இதனால் கட்டுமான தொழிலை நம்பி உள்ள பொறியாளர்கள், காண்டிராக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை வேண்டும்.
,தமிழகத்தில் உள்ள கனிம வளங்களான ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஓசூர் பகுதியில் இருந்து சுமார் 2,000 லாரிகளில் கனிம வளங்கள் க
ர்நாடக மாநிலத்திற்கு கட்டுமான தொழில்களுக்காக கொண்டு செல்லப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமான பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து தினந்தோறும் கட்டுமான பொருட்கள் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.
எனவே மத்திய,மாநில அரசுகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, சங்க துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் வெங்கட்ரமணி, பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் தலைவர்கள் எம். நடராஜன், தர்மன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள், ஓசூர் சப்- கலெக்டரிடம் மனு வழங்கினர்.
- மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- சுற்றுவட்டாரத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
ஓசூர்,
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையம் மற்றும் ஓசூர் மின் நகர், சிப்காட் பேஸ் - 2, ஜுஜுவாடி மற்றும் கெம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பஸ் நிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு (பகுதி), சீதாராம் நகர், வானவில் நகர், தின்னூர், வாசுகி நகர், நவதி, அம்மன் நகர், ஐடிஐ, குருபட்டி, புனுகன் தொட்டி, அலசநத்தம், தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், சிப்காட் பகுதி - 2 பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோரனபள்ளி ஆலூர் ,புக்கசாகரம், கதிரேபள்ளி அதியமான் காலேஜ், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அங்கேபள்ளி மற்றும் ஓசூர் காமராஜ் காலனி, அண்ணா நகர், பஸ் நிலையம், ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், நியூ ஹட்கோ, மற்றும் ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, தர்கா, பேகேபள்ளி, பேடரபள்ளி, அசோக் லேலண்டு - 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரேபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்திலும், கெம்பட்டி, பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, பாரந்தூர், கோபனபள்ளி, ஜாகீர்கோடிபள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானபள்ளி, கூலி சந்திரம்,செட்டிப்பள்ளி, மாசிநாயகனப்பள்ளி, குப்பட்டி, உப்பாரபள்ளி, தளிஉப்பனூர், ஒன்னட்டி, , குருபரபள்ளி, டி. கொத்தூர் கல்லுபாலம், பி .பி.பாளையம், நல்லசந்திரம், பின்னமங்கலம், மானுபள்ளி, கே. அக்ரஹாரம், உனிசநத்தம், தாரவேந்திரம்,ஜவளகிரி, கெம்பத்தபள்ளி, பி.ஆர்.தொட்டி, அகலக்கோட்டை, அன்னியாளம்,கக்கதாசம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவரது கன்றுக்குட்டி ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
- சேற்றில் சிக்கி நாகராஜ் பலியானது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி ஊராட்சியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37), லாரி டிரைவரும், விவசாயியுமான இவர் நேற்று தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது கன்றுக்குட்டி ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது. உடனே கன்றுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்த நாகராஜ் உள்ளே சேற்றில் சிக்கி மூச்சு திணறி தண்ணீரில் மூழ்கிஉள்ளார்.
இதனிடையே அங்கு வந்த அவரது உறவினர்கள் நாகராஜின் செருப்பு மற்றும் உடைகள் கிணற்று மேல் பகுதியில் இருந்ததால் உடனடியாக கிணற்றில் குதித்து உயிருக்கு போராடிய கன்று குட்டியை காப்பாற்றினர். பலி மேலும் கன்றுக்குட்டியை காப்பாற்ற நாகராஜ் கிணற்றில் குதித்து மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் தீவிரமாக தேடிய போது, சேற்றில் சிக்கி நாகராஜ் பலியானது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நாகராஜுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கன்று குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மூங்கிலேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
- முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி 2023-ம் ஆண்டு தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 1,058 ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நடத்தும் 36 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,094 ரேஷன் கடைகளில் உள்ள அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 934 பேர் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 338 ரேஷன்கார்டுதாரர்கள் என மொத்தம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 272 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு பன்னீர் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் பெற ஏதுவாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் தொடர்புடைய ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு, அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வருகிற 8-ந் தேதி வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பரிசு தொகுப்பு பொருட்களை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு தங்களுக்குரிய ரேஷன் கடைகளில் முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
- அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் தளிஅள்ளி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதில் தமிழக முதல் அமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.
அதே போல அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
- அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த கேபிள் மற்றும் 2 கம்பங்களும் உடைந்து வேப்பனப்பள்ளி பேரிகை சாலையில் முறிந்து விழுந்தது.
- கம்பங்கள் அகற்றபடமால் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கடவரப்பள்ளி கிராமத்தின் சாலையோரங்களில் தனியார் நிறுவனத்தின் கேபிள்கள் கம்பங்கள் அமைக்கப்பட்டுருந்தது.
இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த கேபிள் மற்றும் 2 கம்பங்களும் உடைந்து வேப்பனப்பள்ளி பேரிகை சாலையில் முறிந்து விழுந்தது.
இதனால் இரவு முதல் ஆபத்தான முறையில் சாலையில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தும் நாள் முழுவதும் கம்பங்கள் அகற்றபடமால் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் கேபிள் நாள் முழுவதும் சாலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு பயணம் செய்து வருகின்றனர்.
உடனடியாக தனியார் நிறுவன ஊழியர்கள் உடைந்த கம்பங்களை சாலையில் இருந்து அகற்றி கம்பங்களையும் கேபி ள்களையும் பாதுகப்பாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சாலையில் உடைந்த விழுந்த கேபிள் கம்பங்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும்.
- செவிலியர் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பபட்டு போலியோ தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும். பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக, ஆறாவது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த நிலையில் மத்திய அரசு, 9-வது மாதம் முதல் 12-வது மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தடுப்பூசி போடும் திட்டத்தையும் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கூடுதல் போலியோ தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கியது-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 270 துணை சுகாதார நிலையங்கள் மற்றும், 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அங்கன்வாடி மையங்களுக்கும் மருத்துவர், செவிலியர் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பபட்டு போலியோ தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 832 குழந்தைகளுக்கு கூடுதல் தவணை போலியோ தடுப்பூசி போடப்பட்டன. இனிவரும் காலங்களில், 9 மாதம் முதல் 12 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தவணை தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
- 2 அம்மா உணவகங்களிலும் தலா, 12 பேர் என மொத்தம், 24 பேர் பணிபுரிகின்றனர்.
- தற்போது நகராட்சி ஆணையாளர் 6 பேர் மட்டுமே வேலை செய்யுமாறு கூறுகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சியில் சந்தைப்பேட்டை, 1-வது கிராஸ், மற்றும் காந்தி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த 2 அம்மா உணவகங்களிலும் தலா, 12 பேர் என மொத்தம், 24 பேர் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் இந்த உணவகத்தில் திடீர் ஆட்குறைப்பு செய்வதாக கூறி நகராட்சி அலுவலகம் முன்பு அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்றி வருகிறோம். கொரோனா காலத்திலும் வேலை செய்துள்ளோம். தற்போது நகராட்சி ஆணையாளர் 6 பேர் மட்டுமே வேலை செய்யுமாறு கூறுகிறார். இது தொடர்பாக நாங்கள் நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் புகார் செய்துள்ளோம். எங்களை திடீரென்று பணியில் இருந்து நீக்க கூடாது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனர்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் சுந்தாராம்பாள் கூறுகையில், நகராட்சிகளில் அம்மா உணவகங்களின் செலவினத்தை குறைப்பதற்காக ஆட்களை குறைத்து வருகிறோம். அவர்களுக்கு வேறு பணிகளுக்கு வாய்ப்பு இருந்தால் அதையும் செய்து தருகிறோம். ஆனால் இவர்கள் என்னிடம் இதுகுறித்து கூறவில்லை. எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் மாற்று பணிக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
- கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இப்பயிற்சி நடைபெற்றது.
- துணை முதல்வர் அன்புமணி ஆகியோர் இப்பயிற்சியை பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி கடந்த 2 முதல் நேற்று வரை அனைத்து ஒன்றியங்களிலும் நடந்தன.
இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதும் 2,352 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இப்பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் முனைவர் முத்துபழனிசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் ஷமீம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) மோகன், துணை முதல்வர் அன்புமணி ஆகியோர் இப்பயிற்சியை பார்வையிட்டனர்.
இதன் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பார்வதி மற்றும் மயில்சாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், ஆசிரியர் பயிற்றுனர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.
- நேற்று மின்மோட்டார் இயக்கிய போது மின்சாரம் தாக்கியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே சோப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது55). விவசாயியான இவர் நேற்று மின்மோட்டார் இயக்கிய போது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் தனியார் பள்ளி வாகனத்தை மறித்து டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
- விஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஜி (வயது23). இவர் தனியார் பள்ளி வாகனத்தை மறித்து டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜியை கைது செய்தனர்.






