என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி

    • கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இப்பயிற்சி நடைபெற்றது.
    • துணை முதல்வர் அன்புமணி ஆகியோர் இப்பயிற்சியை பார்வையிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி கடந்த 2 முதல் நேற்று வரை அனைத்து ஒன்றியங்களிலும் நடந்தன.

    இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதும் 2,352 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இப்பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியை ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் முனைவர் முத்துபழனிசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் ஷமீம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) மோகன், துணை முதல்வர் அன்புமணி ஆகியோர் இப்பயிற்சியை பார்வையிட்டனர்.

    இதன் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பார்வதி மற்றும் மயில்சாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், ஆசிரியர் பயிற்றுனர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

    Next Story
    ×