என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.சாண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் விலை உயர்வு:ஓசூர் சிவில் எஞ்சினீயர் சங்கத்தினர் குற்றச்சாட்டு
    X

    ஓசூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் (ஹோசியா) சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்ட சங்க தலைவர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

    எம்.சாண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் விலை உயர்வு:ஓசூர் சிவில் எஞ்சினீயர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

    • சிமெண்ட். ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்து விட்டது..
    • சிமெண்ட். ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்து விட்டது..

    ஓசூர்,

    ஓசூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் (ஹோசியா) சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம் நேற்று ஓசூரில் நடைபெற்றது. பின்னர், சங்க தலைவர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கட்டுமான பொருள்களான சிமெண்ட். ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்து விட்டது.. இதனால் கட்டுமான தொழிலை நம்பி உள்ள பொறியாளர்கள், காண்டிராக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை வேண்டும்.

    ,தமிழகத்தில் உள்ள கனிம வளங்களான ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஓசூர் பகுதியில் இருந்து சுமார் 2,000 லாரிகளில் கனிம வளங்கள் க

    ர்நாடக மாநிலத்திற்கு கட்டுமான தொழில்களுக்காக கொண்டு செல்லப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமான பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து தினந்தோறும் கட்டுமான பொருட்கள் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.

    எனவே மத்திய,மாநில அரசுகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, சங்க துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் வெங்கட்ரமணி, பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் தலைவர்கள் எம். நடராஜன், தர்மன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள், ஓசூர் சப்- கலெக்டரிடம் மனு வழங்கினர்.

    Next Story
    ×