என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.3.58 லட்சம் மதிப்பிலான சீருடைகளை ஐ.வி.டி.பி தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியமைக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காரிமங்கலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் 3000- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் பல்வேறு பொருளாதார பின்னணியிலிருந்து கல்லூரிக்கு வருகின்றனர். அம்மாணவிகள் ஏற்றத் தாழ்வுகளின்றி, சமத்துவ மனப்பான்மையுடன் கல்லூரிக்கு வரும் பொருட்டு சென்ற கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு இளங்கலை முதலாண்டு பயிலும் 680 மாணவிகளுக்கும் மற்றும் முதுகலை முதலாண்டு பயிலும் 125 மாணவிகளுக்கும் தலா ரூ.445 என மொத்தம் ரூ.3.58 இலட்சம் மதிப்பிலான சீருடைகளை ஐ.வி.டி.பி தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
விழாவிற்கு முன்னிலை வகித்த கல்லூரியின் முதல்வர் கீதா கல்லூரி மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியமைக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இக்கல்லூரிக்கு கணிணி ஆய்வகம், கல்வி உதவித்தொகை, கொரோனா நிவாரணப்பணிகள், தையல் இயந்திரங்கள், அடிப்படை ஆங்கிலப்பயிற்சி என பல்வேறு கல்விப் பணிகளுக்காக இதுவரை ரூ.28.96 லட்சத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடக்க ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டும்
கிருஷ்ணகிரி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நம்பிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில், சமீபத்தில் ஆசிரியர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்க ளுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிட தமிழக முதல்& அமைச்சருக்கு தெரியப்ப டுத்தவும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்க ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கோபி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சாதிக் உசேன் வரவேற்றார். ஆர்ப்பா ட்டத்தில், பணி பாதுகாப்பு சட்டம், அதன் அவசியம் பற்றி, மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ்ராஜ், மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பணி பாதுகாப்பு சட்டம் பற்றியும், அனைவருக்கும் எடுத்துரைத்து, இதன் மீது தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்க இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதாக விளக்கம் அளித்தார். மேலும் இது தொடர்பான கடிதத்தை முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார். இதில் ஓய்வு பிரிவின் மாவட்ட தலைவர் ரங்கப்பன், செயலாளர் ஜெய ஆரோக்கியசாமி, பொருளாளர் திம்மராயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் மரிய சாந்தி, பிரியதர்ஷினி, நளினி பிரியா, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், சுதாகர் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஓட்டல், டீக்கடைகளில் விதிகளை மீறி வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 10 சிலிண்டர்களைப் பயன்படுத்தியதை கண்டறிந்து, அவைகளைப் பறிமுதல் செய்தார்.
- கடைகள் மீது, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களை, பேக்கரி கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், உணவு விடுதிகளில் பெருமளவு பயன்படுத்துவதாக பறக்கும் படை தாசில்தார் இளங்கோவிற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள 5 ரோடு ரவுண்டானா, சேலம் சாலை, சென்னை சாலை, ராசுவீதி, புதுப்பேட்டை, சந்தைபேட்டை காய்கறி மார்க்கெட், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஓட்டல், டீக்கடைகளில் விதிகளை மீறி வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 10 சிலிண்டர்களைப் பயன்படுத்தியதை கண்டறிந்து, அவைகளைப் பறிமுதல் செய்தார். அப்படிப் பயன்படுத்திய கடைகள் மீது, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து தாசில்தார் இளங்கோ கூறுகையில், வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களை கடைகளுக்கு வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மன விரக்தியில் இருந்த தேஜஸ்வினி நேற்று முன் தினம் விஷம் குடித்துள்ளார்.
- கடந்த 28-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள நந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த காவிரியப்பா. இவரது மகள் தேஜஸ்வினி (16). இவருக்கு நீண்ட நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை .
இதனால் மன விரக்தியில் இருந்த தேஜஸ்வினி நேற்று முன் தினம் விஷம் குடித்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் சாமல்பட்டி அருகே உள்ள. கல்குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மகன் வாஞ்சிநாதன். இவருக்கும் இதே போல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து, மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தன.
- மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை பரிசாக வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து, மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தன.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா, கருத்தரங்கம் ஆகியவை நடந்தன.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். பேராசிரியர் வேல்சாமி வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஜெகன் மற்றும் ஸ்டீபன் விக்டர் ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேராசிரி யர்கள் கரோலின்ரோஸி, ராஜலட்சுமி, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நூலகர் தனசீலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகாந்த் செய்திருந்தார்.
- மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.
- இளம்பெ ண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள லாட்ஜியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஒசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இளம்பெ ண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஒசூர் முனீஸ்வர் நகர் பகுதியை ரதினா(எ) ரத்தினவேணி(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
- தனது அறையில் லாரன்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர்,
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி .இவரது மகன் லாரன்ஸ் (வயது42). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது அறையில் லாரன்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- அடிக்கடி மது போதையில் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
- மனவிரக்கியில் அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள தோக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி .இவருடைய மகன் லாரன்ஸ் (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது . இதனால் அடிக்கடி மது போதையில் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார்.
இதனால் மனவிரக்கியில் அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஓராண்டில் நடந்த நிகழ்ச்சிகளை கண்காட்சிக்காக காட்சிப் படுத்தியிருந்தனர்.
- யூகே நிறுவனத்தின் செயல்திட்டத்தில் ஈடுபட்ட 35 மாணவர்கள், 3 நிலைகளை முடித்து சில்வர் விருதை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓராண்டில் நடந்த நிகழ்ச்சிகளை கண்காட்சிக்காக காட்சிப் படுத்தியிருந்தனர்.
இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி என அனைத்து பாட ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் இந்த கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் விருதுகள் என அனைத்து சாதனங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த ஆண்டில் 550-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 50-க்கும் மேற்பட்ட கேடயங்களைப் பெற்று இம்மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிறார் திரைப்படத்தில் புகைப்படம் எடுத்த7-ம் வகுப்பு மாணவி சாருஹாசினி, இதே திரைப்படம் குறித்து வானவில் மன்றம் சார்பில் கட்டுரை சமர்பித்த ஜெயின்கான் ஆகிய இருவரும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். விளையாட்டுப் பிரிவில், சாருஹாசினி டென்னிஸ், நீச்சல் போட்டி சுரேஷ், டேக்வாண்டோ லேபக்?ஷா ஆகியோர் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
விண்கற்கள் கண்டுபிடிப்பில் 6 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு நாசாவின் மூலம் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். யூகே நிறுவனத்தின் செயல்திட்டத்தில் ஈடுபட்ட 35 மாணவர்கள், 3 நிலைகளை முடித்து சில்வர் விருதை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எரிசக்தி மன்றம் சார்பில் நடந்த போட்டிகள், மனித வள மேம்பாட்டு ஆணையம் மூலம் நடந்த போட்டிகள், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள், மாவட்ட மைய நூலகத்தில் நடந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆகியவற்றில் மாணவ, மாணவியர் முதலிடம் பெற்றனர்.
மேலும் அரசுப் பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அருகில் உள்ள பள்ளிகளான கே.ஏ., நகர், தாசரபள்ளி, கே.பூசாரிப்பட்டி, ஒபலேசப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் வருகை புரிந்து பள்ளி செயல் விளக்க கண்காட்சியைப் பார்வையிட்டனர். முன்னதாக கண்காட்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாராணி தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சென்னம்மாள், உதவி தலைமை ஆசிரியர் விஜய் மற்றும் ஆசிரியர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றனர்.
- இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது போலீசார் சோதனையில் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள லாட்ஜியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த ரதினா(எ) ரத்தினவேணி (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
- ரூ.2 லட்சத்து 7ஆயிரம், 8 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மூன்று பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் கர்ணபள்ளி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு பணம் வைத்து சூதாடி பேரிகை அண்ணாநகர் அபிலாஷ் (27),பசவராஜ் (26), சூளகிரி நாகராஜ் (25),ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர் .மேலும் ரூ.2 லட்சத்து 7ஆயிரம், 8 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போல் ஓசூர் சிப்காட் போலீசார் சிப்காட் சின்ன எலசகிரி அருகே ரோந்து பணியில் அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பசுபோமச்சி (23), அருண்ஓரங் (23), நூர்ஜல்இஸ்லாம் (21), இவர்கள் மூன்று பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பணம் ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒரு பெட்டி கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வது தெரிய வந்தது.
- மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா 600 கிராம் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெங்களூர் சாலையில் ரோந்து பணியில் அமர்த்தப்பட்டு அங்குள்ள ஒரு பெட்டி கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இந்த கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட ராம்நகர் சேர்ந்த கந்தன் (வயது 32), மத்திகிரி கணேஷ் மேத்தா(38), சுப்பிரமணி காலனி ஜமீர் (34), வாசவி நகர் சபரீசன்(36)ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா 600 கிராம் பறிமுதல் செய்தனர்.






