என் மலர்
உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
- மன விரக்தியில் இருந்த தேஜஸ்வினி நேற்று முன் தினம் விஷம் குடித்துள்ளார்.
- கடந்த 28-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள நந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த காவிரியப்பா. இவரது மகள் தேஜஸ்வினி (16). இவருக்கு நீண்ட நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை .
இதனால் மன விரக்தியில் இருந்த தேஜஸ்வினி நேற்று முன் தினம் விஷம் குடித்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் சாமல்பட்டி அருகே உள்ள. கல்குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மகன் வாஞ்சிநாதன். இவருக்கும் இதே போல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






