என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து, மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தன.
- மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை பரிசாக வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து, மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தன.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா, கருத்தரங்கம் ஆகியவை நடந்தன.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். பேராசிரியர் வேல்சாமி வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஜெகன் மற்றும் ஸ்டீபன் விக்டர் ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேராசிரி யர்கள் கரோலின்ரோஸி, ராஜலட்சுமி, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நூலகர் தனசீலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகாந்த் செய்திருந்தார்.






