என் மலர்
கிருஷ்ணகிரி
- முகாமில் 5-வது நாளாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கோண ப்பட்டி கிராம சாலையோர பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
- பாட்டிலில் நீரை நிரப்புதல், லெமன் மற்றும் ஸ்பூன் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி உற்சாகப்டுத்தினார்.
மத்தூர்,
பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கோணப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்று வருகிறது.
சிறப்பு முகாமில் 5-வது நாளாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கோண ப்பட்டி கிராம சாலையோர பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
அரசு தொடக்க ப்பள்ளியில் தொடங்கி அரசு உயர்நிலை ப்பள்ளி வரை இப்பணியை மேற்கொ ண்டனர். அதன் பின் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவிகளுக்கு இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், பாட்டிலில் நீரை நிரப்புதல், லெமன் மற்றும் ஸ்பூன் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி உற்சாகப்டுத்தினார்.
இதனையடுத்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவி சுகந்தி அனைவரையும் வரவேற்றார். அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி. திருமால்முருகன் குழந்தை திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குடும்ப சூழ்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் விளக்கி தலைமையு ரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு கிருஷ்ணகிரி இளம் சிறார் நீதி குழுமம் உறுப்பினர் வின்சென்ட் சுந்தர்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் முடிவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவி சவுமியா நன்றி கூறினார்.
- மாணவ, மாணவியர் வெள்ளை கோட் மற்றும் ஸ்டெதாஸ்கோப் அணிந்து உறுதிமொழி ஏற்றனர்.
- அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மருத்துவ மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணத்தை தம்பிதுரை எம்.பி. வழங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் (2022-2023 பேட்ச்) மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி (ஒயிட்கோட்) வழங்கும் விழா நடைபெற்றது.
ஓசூர் அதியமான் கல்லூரி உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவிற்கு செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவியர் வெள்ளை கோட் மற்றும் ஸ்டெதாஸ்கோப் அணிந்து உறுதிமொழி ஏற்றனர். மேலும் இதில், மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
விழாவையொட்டி, நடனம், ஆடல், பாடல் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மருத்துவ மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணத்தை தம்பிதுரை எம்.பி. வழங்கினார்.
மேலும் விழாவில், மருத்துவக் கல்லூரி டீன் சோமசேகர், மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்த ரெட்டி, அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் வாசுதேவா, முதன்மை மருத்துவ அலுவலர் கார்த்திக், இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
- கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள தளிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சக்தி (33). கூலித் தொழிலாளி.
இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கடந்த 31-ம் தேதி தளிஹள்ளி தென்பெண்ணை ஆற்றின் கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பல்வேறு மருத்துவம னையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.
- விரத்தி அடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள வரட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி (வயது39), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
பல்வேறு மருத்துவம னையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால் விரத்தி அடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடித்துவிட்டு வீடு அருகே வந்த போது விழுந்து கிடந்துள்ளார்.
- தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி சிவாஜி நகர் பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது42).முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து கடந்த 8 வருடங்களாக தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீடு அருகே வந்த போது விழுந்து கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி ஷோபா (36) கொடுத்த புகாரின் பேரில் மகாராஜாகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு நின்றிருந்த நபர் பித்தளை பாத்திரங்களை திருடிக் கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அப்பு நாயுடு தெருவை சேர்ந்த மோகன் (வயது67). இவர் நேற்று தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த மோகன் கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு நின்றிருந்த நபர் பித்தளை பாத்திரங்களை திருடிக் கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்து சிங்காரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் ஊத்தங்கரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன்( 40) என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய சபரி என்பவரை கைது செய்தனர்.
- இளங்கோ (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார், மத்தூர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது அங்கு குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த நாகம்பட்டியை சேர்ந்த சபரி (வயது 23) என்பதை கைது செய்தனர்.
இதேபோல் ஊத்தங்கரை போலீசார் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு குடிபோதையில் பேசிக் கொண்டிருந்த வண்டிக்காரன் கொட்டாயை சேர்ந்த இளங்கோ (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- போட்டிகளில் கல்நதுகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.
கிருஷ்ணகிரி,
கோலோ இந்தியா திட்டத்தின் கீழ் தடகள விளையாட்டில் வீரர், வீராங்கனைகள் தேர்வு வருகிற 5-ந் தேதி ஓசூரில் நடக்கிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கோலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்கநிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி மினி விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் வருகிற 5-ந் தேதி காலை 9 மணிக்கு ஓசூர் அந்திவாடி மினி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளர் வாயிலாக வருகிற 6-ந் தேதி முதல் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையுலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகள பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்பட உள்ளனர்.
மேலும், போட்டிகளில் கல்நதுகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017-03487 என்ற செல்போன் எண் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
எனவே, ஓசூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
- காந்தி சிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது.
- குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஒசாண்ணா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர்.
கிருஷ்ணகிரி,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுநாதரை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்ட இஸ்ராயேல் மக்கள், தங்கள் கைகளிலே ஒலிவ மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு, இயேசுநாதரை கழுதை மீது அமர வைத்து எருசலம் நகரில் பவனி வந்தனர்.
அப்போது, "உன்னதங்களின் ஒசாண்ணா.. ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர்" எனும் தூதிப்பாடலை பாடியவாறு நகர் வலம் வந்தனர். இந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் படி இன்று, கிருஷ்ணகிரி - பழையபேட்டையில் அமைந்துள்ள புனித இஞ்ஞியாசியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி, காந்தி சிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது.
இந்த குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஒசாண்ணா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர். பின்னர், தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதே போல் ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், புஷ்பகிரி, எலத்தகிரி என தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.
- 3.1.2023ம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
விளையாட்டுத் துறையில் சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in வாயிலாக வரவேற்கப்படுகிறது. சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். 3.1.2023ம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான வெட்ரன்ஸ், மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் (www.sdat.tn.gov.in) வருகிற 19ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
- லாரியில் 50 கிலோ எடை கொண்ட 105 சாக்கு பைகளில் 5.250 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- அரிசியை நுகர்பொருள் வாணிப கழக கிடங்களில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, கர்நாடகாவிற்கு லாரி மூலம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து,
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி அருண், சூப்பிரண்டு பாலாஜி, துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்க்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு குழுவினர் நேற்று காலை ஓசூர் எஸ்.எல்.வி நகரில் உள்ள சர்தார்(வயது 32) என்பவரது வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு நின்றிருந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 105 சாக்கு பைகளில் 5.250 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சர்தாரிடம் நடத்திய விசாரணையில், சென்னத்தூர் மற்றும் சானசந்திரம் ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக வாங்கி, அதை கர்நாடகாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சர்தார், சூளகிரி கிருஷ்ணபாளையம் மணிகண்டன்(35), கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி அரவிந்த்(24), வசந்த்(25), ஓசூர் அண்ணா நகர் ஜெயசங்கர் காலனியை சேர்ந்தவரும், சென்னத்தூர் ரேஷன் கடை விற்பனையாளருமான உமாமாதேஸ்வரி (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அரிசியை நுகர்பொருள் வாணிப கழக கிடங்களில் ஒப்படைத்தனர்.
இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், மாவட்டத்தில் தனி நபர்களிடமிருந்து ரேஷன் அரிசி வாங்கி கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்றனர்.
- அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
- இன்று 89-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்கும் பணிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று 89-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற விவசாயிகள் பயிர் செடிகள், காய்கறிகள், ஏர் உழவு கலப்பை ஆகியவற்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






