என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடகள விளையாட்டில் வீரர், வீராங்கனைகள் தேர்வு
    X

    தடகள விளையாட்டில் வீரர், வீராங்கனைகள் தேர்வு

    • 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • போட்டிகளில் கல்நதுகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கோலோ இந்தியா திட்டத்தின் கீழ் தடகள விளையாட்டில் வீரர், வீராங்கனைகள் தேர்வு வருகிற 5-ந் தேதி ஓசூரில் நடக்கிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கோலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்கநிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி மினி விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் வருகிற 5-ந் தேதி காலை 9 மணிக்கு ஓசூர் அந்திவாடி மினி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

    இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளர் வாயிலாக வருகிற 6-ந் தேதி முதல் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையுலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகள பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்பட உள்ளனர்.

    மேலும், போட்டிகளில் கல்நதுகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017-03487 என்ற செல்போன் எண் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    எனவே, ஓசூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×