என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி சார்பில் வெள்ளை கோட் வழங்கும் விழா
    X

    மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் தம்பிதுரை எம்.பி. வழங்கும் போது எடுத்த படம்.

    ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி சார்பில் வெள்ளை கோட் வழங்கும் விழா

    • மாணவ, மாணவியர் வெள்ளை கோட் மற்றும் ஸ்டெதாஸ்கோப் அணிந்து உறுதிமொழி ஏற்றனர்.
    • அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மருத்துவ மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணத்தை தம்பிதுரை எம்.பி. வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் (2022-2023 பேட்ச்) மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி (ஒயிட்கோட்) வழங்கும் விழா நடைபெற்றது.

    ஓசூர் அதியமான் கல்லூரி உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவிற்கு செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாணவ, மாணவியர் வெள்ளை கோட் மற்றும் ஸ்டெதாஸ்கோப் அணிந்து உறுதிமொழி ஏற்றனர். மேலும் இதில், மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    விழாவையொட்டி, நடனம், ஆடல், பாடல் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மருத்துவ மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணத்தை தம்பிதுரை எம்.பி. வழங்கினார்.

    மேலும் விழாவில், மருத்துவக் கல்லூரி டீன் சோமசேகர், மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்த ரெட்டி, அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் வாசுதேவா, முதன்மை மருத்துவ அலுவலர் கார்த்திக், இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×