என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் விழுந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு
- குடித்துவிட்டு வீடு அருகே வந்த போது விழுந்து கிடந்துள்ளார்.
- தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி சிவாஜி நகர் பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது42).முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து கடந்த 8 வருடங்களாக தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீடு அருகே வந்த போது விழுந்து கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி ஷோபா (36) கொடுத்த புகாரின் பேரில் மகாராஜாகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






