குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி்யில் குருத்தோலை பவனி

காந்தி சிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது. குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஒசாண்ணா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர்.
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி்யில் குருத்தோலை பவனி
Published on

கிருஷ்ணகிரி,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுநாதரை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்ட இஸ்ராயேல் மக்கள், தங்கள் கைகளிலே ஒலிவ மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு, இயேசுநாதரை கழுதை மீது அமர வைத்து எருசலம் நகரில் பவனி வந்தனர்.

அப்போது, "உன்னதங்களின் ஒசாண்ணா.. ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர்" எனும் தூதிப்பாடலை பாடியவாறு நகர் வலம் வந்தனர். இந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் படி இன்று, கிருஷ்ணகிரி - பழையபேட்டையில் அமைந்துள்ள புனித இஞ்ஞியாசியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி, காந்தி சிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது.

இந்த குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஒசாண்ணா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர். பின்னர், தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதே போல் ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், புஷ்பகிரி, எலத்தகிரி என தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com