என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மின்நகர், சிப்காட் பேஸ்-2 கெம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஓசூர் கோட்டம் ஜூஜூவாடி துணை மின்நிலையம், ஓசூர் துணை மின்நிலையம் மற்றும் மின்நகர், சிப்காட் பேஸ்-2 கெம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1-ல் இருந்து சூர்யா நகர், பாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், எழில்நகர்,

    ராஜேஸ்வரி லேஅவுட், சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி, புதிய பஸ் நிலையம், அலசநத்தம், பழைய டெம்பிள் ஹட்கோ, புனு கன்தொட்டி, அண்ணாநகர், வானவில் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மேலும் தின்னூர், வாசவி நகர், நவதி, ஐ.டி.ஐ., அம்மன் நகர், குருப்பட்டி, நேதாஜி ரோடு (பகுதி), சீதாராம் நகர், சிப்காட் பகுதி-2, பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானி க் எஸ்டேட், குமுதேப்பள்ளி, மோரனபள்ளி, ஏ.சாமனப்பள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அன்கேபள்ளி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரேபா ளையம், எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ ஹட்கோ, ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், ஆனந்த நகர் பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.

    இதேபோல் அரசனட்டி, எம்.ஜி. ரோடு, கிருஷ்ணா நகர், நரசிம்மா காலனி, கெம்பட்டி, பேளகொ ண்டபள்ளி, மதகொண்ட பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, முதுகான ப்பள்ளி, நாகொண்டபள்ளி, கோபனபள்ளி, கூலிசந்தி ரம், ஜாகீர்கோடிப் பள்ளி, மாசிநாயக்கனபள்ளி, ஒன்னட்டி, உப்பாரபள்ளி, குப்பட்டி,

    தளி உப்பனூர், டி.கொத்தூ ர், தாரவேந்திரம், ஜவளகிரி, அகலக்கோட்டை, பி.ஆர்.தொட்டி, மானுப்பள்ளி, கெம்பத்தப்பள்ளி, உனிச நத்தம், பின்னமங்கலம், அன்னியாளம், கக்கதாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமத்தியாவரபுரம் முல்லை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் கனி ஸ்ரீ என்கிற 1 அரை வயது குழந்தை.

    இந்த குழந்தை வீட்டில் விளை யாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த 21-ஆம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • இவரது பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி- சேலம் மெயின் சாலை அவ்வை நகர் பகுதியில் சேர்ந்தவர் மாணவி. இவர் ஓரப்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 21-ஆம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை சூர்யா என்பவர் கடத்திச் சென்றதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது
    • குடும்ப பிரச்சினையின் காரணமாக மல்லிகா அர்ஜூனன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேபள்ளி அடுத்துள்ள பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா அர்ஜூனன். கூலித் தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் குடும்ப பிரச்சினையின் காரணமாக மல்லிகா அர்ஜூனன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

    • இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பால தடுப்பு சுவரின் மீது மோதினார்.
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள திம்மராஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது21).

    சம்பவத்தன்று இவர் காவேரிப்பட்டினம் அருகே உள்ள அன்னக்கொட்டாய் பகுதி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பால தடுப்பு சுவரின் மீது மோதினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக சாம்ராஜ் மீது மோதியது.
    • சிகிச்சை சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது54). கூலித்தொழிலாளி.

    சம்பவத்தன்று தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சப்பானிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக சாம்ராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போதை தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கைதான அவரிடம் இருந்து 21,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி போதை தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பொருட்கள் தெரியவந்தது.

    இதில் அவரை விசாரித்ததில் கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த குட்டு கடவாத்து கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்ரா (வயது24) என்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 21,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு 50 கிலோ எடை கொண்ட உருளை கிழங்கு மூட்டையானது ரூ.400-க்கு விற்பனையானது.
    • தற்போது ரூ.600-க்கு விற்பனையாவதால் விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த வருடம் நல்ல மழை பெய்ததால் விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதி உள்ளது.

    இதனையடுத்து பேரிகை, காட்டு நாயக்கனதொட்டி, பி.எஸ், திம்மசந்திரம், ஆலுர், அத்திமுகம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் உருளை கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இவர்கள் 3 மாதத்திற்கு முன்பு உருளை கிழங்கை நடவு செய்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 50 கிலோ எடை கொண்ட உருளை கிழங்கு மூட்டையானது ரூ.400-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.600-க்கு விற்பனையாவதால் விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.

    இருப்பினும் விளைந்த உருளை கிழங்குகள் சில தினம் முன்பு பெய்த கோடை மழையின் காரணமாக அழுகல் ஏற்பட்டுள்ளதால் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். 

    • தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

    தருமபுரி,

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு நோய்தொற்று குறைந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.தருமபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் நல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதேபோன்று தருமபுரி டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, வட்டார வளர்ச்சி காலனி ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

    இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பா ரப்பட்டி, ஏரியூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெ ட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள குமுதே பள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது29). பெயிண்டர். இவருடைய மனைவி குணவதி (24).

    இந்த நிலையில் மாதேஷ்க்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாதேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
    • சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    காலை முதல் மாலை வரை 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரிப்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் வேப்பன ப்பள்ளி பகுதியில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    பொதுமக்கள் மகிழ்ச்சி வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, மாதேப்பள்ளி, நாச்சிகுப்பம், நேரலகிரி, தீர்த்தம், குருபரப்பள்ளி பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றுமாலை லேசான மழை பெய்துள்ளது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கட்டிட உரிமங்கள் உரிய காலத்திற்குள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி, மாவட்ட கருவூலம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ராயக்கோட்டையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் உடையாண்டஅள்ளி கிராமத்தில் அமைப்பதற்கு நில மாறுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சூளகிரி தாலுகாவில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலக வளாக பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது.

    அவற்றை அகற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது. வருவாய் துறை சார்பில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் பொது கட்டிட உரிமங்கள் உரிய காலத்திற்குள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    திட்டப்பணிகள் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கார்க், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு மற்றும் அனைத்து துறை மாவட்ட முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×