என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் கோட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- மின்நகர், சிப்காட் பேஸ்-2 கெம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓசூர் கோட்டம் ஜூஜூவாடி துணை மின்நிலையம், ஓசூர் துணை மின்நிலையம் மற்றும் மின்நகர், சிப்காட் பேஸ்-2 கெம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1-ல் இருந்து சூர்யா நகர், பாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், எழில்நகர்,
ராஜேஸ்வரி லேஅவுட், சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி, புதிய பஸ் நிலையம், அலசநத்தம், பழைய டெம்பிள் ஹட்கோ, புனு கன்தொட்டி, அண்ணாநகர், வானவில் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் தின்னூர், வாசவி நகர், நவதி, ஐ.டி.ஐ., அம்மன் நகர், குருப்பட்டி, நேதாஜி ரோடு (பகுதி), சீதாராம் நகர், சிப்காட் பகுதி-2, பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானி க் எஸ்டேட், குமுதேப்பள்ளி, மோரனபள்ளி, ஏ.சாமனப்பள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அன்கேபள்ளி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரேபா ளையம், எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ ஹட்கோ, ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், ஆனந்த நகர் பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
இதேபோல் அரசனட்டி, எம்.ஜி. ரோடு, கிருஷ்ணா நகர், நரசிம்மா காலனி, கெம்பட்டி, பேளகொ ண்டபள்ளி, மதகொண்ட பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, முதுகான ப்பள்ளி, நாகொண்டபள்ளி, கோபனபள்ளி, கூலிசந்தி ரம், ஜாகீர்கோடிப் பள்ளி, மாசிநாயக்கனபள்ளி, ஒன்னட்டி, உப்பாரபள்ளி, குப்பட்டி,
தளி உப்பனூர், டி.கொத்தூ ர், தாரவேந்திரம், ஜவளகிரி, அகலக்கோட்டை, பி.ஆர்.தொட்டி, மானுப்பள்ளி, கெம்பத்தப்பள்ளி, உனிச நத்தம், பின்னமங்கலம், அன்னியாளம், கக்கதாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






