என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர் கைது
- போதை தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- கைதான அவரிடம் இருந்து 21,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி போதை தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பொருட்கள் தெரியவந்தது.
இதில் அவரை விசாரித்ததில் கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த குட்டு கடவாத்து கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்ரா (வயது24) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 21,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story






