என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த எட்டிக்கல் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது40). விவசாயி.

    இவர் சம்பவத்தன்று ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தகவலறிந்து அங்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.
    • லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது27). இவர் மோட்டார் சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று தருமபுரி-ஓசூர் சாலையில் சின்னதடங்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர் செல்வம் படுகாய–மடைந்தார். அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து காயமடைந்த பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்ைட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் பன்னீர் செல்வம் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சாய்சித்ரா (24) கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ஏன் இவ்வாறு மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் இப்படி ஓட்டி செல்கிறாய் என்று தட்டி கேட்டார்.
    • மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை அடுத்த சின்ன எலத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    தகராறு

    சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளியான மாதேஷ் (48) என்பவர் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜேஷ்குமார் குடியிருக்கும் பகுதியில் மாதேஷ் மீண்டு, மீண்டும் பலமுறை மோட்டார் சைக்கிளை சத்தத்துடன் ஓடி சென்றார்.

    இதுகுறித்து ராஜேஷ் குமார் அவரிடம் சென்று ஏன் இவ்வாறு மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் இப்படி ஓட்டி செல்கிறாய் என்று தட்டி கேட்டார்.

    கத்தியால் வெட்டு

    இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறினார். உடனே மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கைது

    இதுகுறித்து ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

    • லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பாம்பாறு அணை அருகில் ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் விழிப்புணர்வு தகவல் பலகைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்த அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.

    இதுபோல் பல சம்பவங்கள் இந்த பகுதியில் நடைபெறுவதால் சாலை விதிகள் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பெரிய ஏரிக்கரையில் கால பைரவர் கோவில் உள்ளது
    • கோவிலின் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் கால பைரவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு பக்தர்களின் வசதிக்காக ரூ.10 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு கோவிலின் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.

    இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் அறக்கட்டளை கவுரவவத் தலைவர் பி.சேகர், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், அறக்கட்டளை தர்மகர்த்தாக்கள் கிருஷ்ண மூர்த்தி, பைரேஸ், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன், பொருளாளர் சங்கர், செயலாளர் கணேசன், இயக்குனர்கள் சுப்பிரமணி, கோபால்,கிருஷ்ணன், நம்பிராஜ், கோவில் பூசாரி அரி, பவுன்ராஜ், நாகேந்திரன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார்.
    • ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை அடுத்த சின்ன எலத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளியான மாதேஷ் (48) என்பவர் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜேஷ்குமார் குடியிருக்கும் பகுதியில் மாதேஷ் மீண்டு, மீண்டும் பலமுறை மோட்டார் சைக்கிளை சத்தத்துடன் ஓடி சென்றார்.

    இதுகுறித்து ராஜேஷ் குமார் அவரிடம் சென்று ஏன் இவ்வாறு மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் இப்படி ஓட்டி செல்கிறாய் என்று தட்டி கேட்டார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறினார். உடனே மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • இப்பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா - அகரம் அரசு நடுநிலைப் பள்ளி சார்பில் 2024-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணவு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் அரசு வழங்கும் காலை உணவுத்திட்டம், புதுமைெபண் திட்டம், இட ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டம் , உள்ளிட்ட அரசு வழங்கி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு கூறி தெரிவுபடுத்தினர்.

    மேலும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இப்பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினகள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • மாணவ, மாணவியருக்கு தங்ககாதணிகள், வாட்டர் பாட்டில்கள் என பல்வேறு ஊக்கப்பரிசுகளை வழங்கி வருகிறது.
    • ரூ. 7.7 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி நிறுவனம் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தங்ககாதணிகள், வாட்டர் பாட்டில்கள் என பல்வேறு ஊக்கப்பரிசுகளை வழங்கி வருகிறது.

    இதனையடுத்து ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளியின் 270 மாணவிகளுக்கு, அப்பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் ரூ.2.94 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், வேலூர் அக்சீலியம் கல்லூரி வணிக நிர்வாகத் துறையின் வெள்ளி விழாவை முன்னிட்டு,

    அத்துறையைச் சார்ந்த 460 மாணவிகளுக்கு ரூ.4.66 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆரணி புனித ஜோசப் விடுதியைச் சார்ந்த 12-ம் வகுப்பு பயிலும் 10 மாணவியருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரங்கள் என 740 மாணவியருக்கு மொத்தம் ரூ. 7.7 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    கை கடிகாரங்களை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் பெண்கள் கல்வி கற்பதின் அவசியத்தை எடுத்துரைத்து, மாணவிகள் நன்றாகப் படித்து வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து, தங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய முன் வரவேண்டும் என அறிவுறுத்தினார்.

    • ரூ.19 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.
    • திறப்பு விழாவில் காலபைரவர் கோவில் பைரவ சுவாமிகள் பல்வேறு திருமுறை மந்திரங்கள் முழங்க, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பப்ட பல்நோக்கு கட்டிடத்தை செல்லக்குமார் எம்.பி., திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காலபைரவர் கோவில் அருகில், மக்களின் பல்வேறு பயன்பாட்டிற்காக பல்நோக்கு கட்டடம் ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என்று கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து செங்கொடி நகர், கந்திகுப்பம் உள்பட சுற்று வட்டாரப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடத்தை எம்.பி. செல்லக்குமார் திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவில் காலபைரவர் கோவில் பைரவ சுவாமிகள் பல்வேறு திருமுறை மந்திரங்கள் முழங்க, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் காசிலிங்கம், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத் தலைவர் சேகர், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் விக்னேஷ்பாபு, சேவாதள காங்., கட்சி மாவட்டத் தலைவர் தேவராஜ், ஆடிட்டர் வடிவேல், பர்கூர் பேருராட்சி தலைவர் சந்தோஷ்குமார், பி.டி.ஓ., பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • 20 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு ரூ.6 லட்சமும் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
    • நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தற்போது கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 10 முதல் 15 வருடம் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 15 முதல் 20 வருடம் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.4 லட்சமும், 20 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு ரூ.6 லட்சமும் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். 

    • போலீஸ் வருவதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தன்னை போலீசார் கைது செய்ய கூடாது எனவும், தன்னை நெருங்கினால் கத்தியால் கையை கிழித்து இறந்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
    • நீதிமன்ற ஆஜருக்கு பின்னர் சத்தியமூர்த்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி காட்டிநாயனப்பள்ளி ரேஷன் கடையில் விற்பனையாளர் உள்பட அரிசி கடத்தலில் ஈடுபட்ட மூவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது35) என்பவரை போலீசார் தேடி வந்தனர். சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

    சத்தியமூர்த்தி கர்நாடக மாநிலத்தின் அரிசி விற்பதற்கு முக்கிய புரோக்கராக செயல்பட்டு வந்ததும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினருடன் பெத்ததாளப்பள்ளியில் தங்கி இருப்பதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் சத்தியமூர்த்தி பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    அப்போது போலீஸ் வருவதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தன்னை போலீசார் கைது செய்ய கூடாது எனவும், தன்னை நெருங்கினால் கத்தியால் கையை கிழித்து இறந்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.

    சத்தியமூர்த்தியின் உறவினர்களும் போலீசாரை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் வீட்டின் பக்கவாட்டு கதவு வழியாக சென்று சத்தியமூர்த்தியை மடக்கி பிடித்தனர். பின்னர் நீதிமன்ற ஆஜருக்கு பின்னர் சத்தியமூர்த்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் கொடூர முடிவெடுத்தார்.
    • தெய்வா வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருடைய மனைவி தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் (4) என்ற மகனும் இருந்தனர்.

    இந்த நிலையில் தெய்வா தனது குழந்தைகளுடன் கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவர்களுடைய வீட்டின் அருகே மாமனார் ஆறுமுகம் (58) அவருடைய மனைவியுடன் தனியாக வசித்து வருகின்றனர்.

    எம்.எஸ்சி. முதுகலை கணித பட்டதாரியான தெய்வா அரசு பணிக்காக போட்டி தேர்வுகளுக்கு படித்து வந்தார்.

    இதற்காக பல்வேறு அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்ற தெய்வா தொடர் தோல்விகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த தெய்வா தொடர் தோல்விகள் குறித்து தனது மாமனாரிடம் கூறி கவலை அடைந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த தெய்வா வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் தான் இறந்து விட்டால் குழந்தைகள் அனாதை ஆகி விடுவார்களே என்று குழப்பம் அடைந்த அவர் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் கொடூர முடிவெடுத்தார்.

    உடனே அவர் வீட்டில் இருந்த அளவுக்கதிமான மாத்திரைகளை தனது 2 குழந்தைகளுக்கும் கரைத்து கொடுத்து விட்டார். சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் வாயில் நுரைதள்ளி இறந்தனர். அதன்பிறகு தெய்வா வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் தாய், மகன், மகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கல்லாவி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக தெய்வாவின் தாயார் பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெய்வா குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை கொடுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    மேலும் தற்கொலை செய்து கொண்ட தெய்வாவிற்கும், மாமனார் ஆறுமுகத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் அதில் மனமுடைந்து தெய்வா இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×