என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வேலையை முடித்து விட்டு கல்வெட்டு பகுதியில் உள்ள பாலத்தின் மேல் தூங்கி கொண்டிருந்தார்.
    • தூக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பா தவறி பாலத்தில் இருந்த கால்வாயில் விழுந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பேகேப்பள்ளி-தாகூர் சாலையில் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    வேலையை முடித்து விட்டு கல்வெட்டு பகுதியில் உள்ள பாலத்தின் மேல் தூங்கி கொண்டிருந்தார். பாலத்தின் அடியில் கால்வாயில் தண்ணீர் அதிகமாக ஓடி கொண்டிருந்தது. அப்போது தூக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பா தவறி பாலத்தில் இருந்த கால்வாயில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கிருஷ்ணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
    • வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டு பேசினர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

    மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கினார். கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி உதவி பேராசிரியை விக்னேஸ்வரி 'புத்தகங்கள் சிந்தனை நிரம்பிய பீரங்கிகள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டு பேசினர். விழாவில், புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவம், அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    உலக புத்தக தினத்தையொட்டி புத்தகக் கண்காட்சியும் நடந்தது. நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், வாசகர் வட்ட தலைவர் கமலேசன், நூலகர் பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உடல் நிலை சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • மனவிரக்தி அடைந்த கண்ணகி சம்பவத்தன்று வீட்டில் பூச்சி மருந்து மயங்கி கிடந்தார்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு வண்ணம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணகி (வயது47). இவர் உடல் நிலை சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனவிரக்தி அடைந்த கண்ணகி சம்பவத்தன்று வீட்டில் பூச்சி மருந்து மயங்கி கிடந்தார். அவரை உடனே உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ண கிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விலை சரிவால் தக்காளியை விற்க முடியாமல் வேதனை அடைந்த விவசாயி வீடு திரும்பினார்.
    • மார்க்கண்டேயன் நதியில் சரக்கு வாகனத்தில் இருந்த சுமார் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டி சென்றார்.

    வேப்பனப்பள்ளி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

    இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வேப்பனப்பள்ளி பகுதிக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 2 முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    15 கிலோ கொண்ட கூடை 30 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி சாகுபடிக்கு போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் தக்காளிகளை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே பதிமடுகு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர் நேற்று காலை தனது தோட்டத்தில் பறித்த தக்காளிகளை கிருஷ்ணகிரியில் உள்ள தக்காளி சந்தைக்கு விற்க சென்றார். ஆனால் விலை சரிவால் தக்காளியை விற்க முடியாமல் வேதனை அடைந்த விவசாயி வீடு திரும்பினார்.

    பின்னர் நாச்சிகுப்பம் அருகே உள்ள மார்க்கண்டேயன் நதியில் சரக்கு வாகனத்தில் இருந்த சுமார் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டி சென்றார்.

    • வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டது.
    • 2 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு இடையே காளைகள் ஓடவிடப்பட்டன.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தும், 14-வது ஆண்டு மாபெரும் எருதுவிடும் விழா நேற்று நடந்தது.

    இவ்விழாவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சேலம், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோர கிராமங்களில் இருந்து 360-க்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் வாகனத்தில் அழைத்து வந்தனர்.

    முன்னதாக பர்கூர் தி.மு.க எம்.எல்.ஏ மதியழகன், கொடியசைத்து எருதுவிடும் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டது.

    ஒவ்வொரு காளைகளையும் நிர்யணம் செய்யப்பட்ட குறிப்பிட்ட தூரத்தை விநாடிகளில் கடக்கிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கீடு செய்யப்பட்டது.

    முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறையினர் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். வருவாய்த்துறை, போலீசார் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    மேலும், 2 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு இடையே காளைகள் ஓடவிடப்பட்டன. இவ்விழாவில் முதல் பரிசாக ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 33ம், 2ம் பரிசாக ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 222ம், 3ம் பரிசாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 111 என மொத்தம் 53 ரொக்க பரிசுகள் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

    விழா நடைபெற்ற பழையபேட்டை நேதாஜி சாலையில் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பயணத்தின்போது உடன் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும்.
    • மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து தற்போது அனல்காற்று வீசுகிறது. இச்சமயங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பானங்கள் குடிக்க வேண்டும்.

    பயணத்தின்போது உடன் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் நிழல் தரும் கூரையின் கீழ் கட்டப்பட்டு இருப்பதையும், அவைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    வெயில் காலங்களில் கூரை வீடுகள் மற்றும் கொட்டகைகள் எளிதில் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விறகு அடுப்பு பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.

    மேலும், மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு 04343 -234444, 233077 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 215 மனுக்களை பெறப்பட்டன.
    • தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாராந்தி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 215 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காலையில் தேர்தல் நடைபெற்ற நிலையில் மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
    • 165 வாக்குகள் பெற்று செயலாளராக சத்தியநாராயணன் துணை செயலாளர் மணிகண்டன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது.

    தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து. தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர், துணைச் செயலாளர்கள், நூலகர், என ஏழு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

    நேற்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் முதன்மை தேர்தல் அலுவலராக பாஸ்கர் உதவி தேர்தல் அலுவலராக பத்மநாதன் வைத்தியலிங்கம் வடிவேல் மணிரத்தினவேல் ஆகிய ஐந்து பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் உள்ள மொத்த வழக்கறிஞர்கள் வாக்காளர்கள் 318 பேர் வாக்களித்தனர். காலையில் தேர்தல் நடைபெற்ற நிலையில் மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் 168 வாக்குகள் பெற்று கோவிந்தராஜுலு இவர் இரண்டாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார், துணை தலைவராக 209 வாக்குகள் பெற்று ராமச்சந்திரன், 238 வாக்குகள் பெற்று சுரேகா மற்றும் 165 வாக்குகள் பெற்று செயலாளராக சத்தியநாராயணன் துணை செயலாளர் மணிகண்டன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    நூலகர் பதவிக்கும் கலையரசன் என்பவர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கியும் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதிய நிர்வாகிகள் அடுத்த ஓராண்டுக்கு வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளாக செயல்பட உள்ளனர்.

    • முதல் மனைவியின் மகனான என்னுடைய அண்ணன் எனக்கு சொத்துக்களை தராமல் ஏமாற்றி வருகிறார்.
    • இது குறித்து பலமுறை அவரிடம் கேட்டும் எனக்கு சொத்துக்கள் தராமல் இழுத்தடித்து வருகிறார்

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காேவரிப்பட்டணம் மிட்டஅள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

    அப்போது கோவிந்தசாvமி கூறியதாவது:-

    நான் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஅள்ளி சொந்த ஊராகும். என் தந்தைக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவியின் மகனான என்னுடைய அண்ணன் எனக்கு சொத்துக்களை தராமல் ஏமாற்றி வருகிறார். மேலும் போலி பத்திரம் தயாரித்து சொத்துக்கள் தர முடியாது என கூறுகிறார். இது குறித்து பலமுறை அவரிடம் கேட்டும் எனக்கு சொத்துக்கள் தராமல் இழுத்தடித்து வருகிறார். மேலும் இது குறித்து கேட்கும் பொழுது என்னுடைய மனைவியை தாக்கி உள்ளார். எனவே இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி கோவிந்தசாமியையும், அவரது குடும்பத்தையும் அனுப்பி வைத்தனர்.

    • பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
    • அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோகரன்சி முறையில் 7 லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.

    அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது. அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் திருவண்ணாமலை வேலூர், தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

    முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர். பின்னர் வாரக்கணக்கில் பணம் வழங்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.

    இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளி என அருண்குமார் தலைமறைவாகி இருந்தார்.

    மீதமுள்ள 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்த அருண்குமார் தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார்.

    இதனை அறிந்த போலீசார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அவர் கிரிப்டோகரன்சி மூலம் அந்த நிறுவனம் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார்.

    எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள், ஒரு கார், 2 மோட்டார்சைக்கிள்களை 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்
    • சிவசுப்பிர மணியனின் கடைக்குள் புகுந்து நாற்காலிகள், மேசைகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள நெருமருதி பக்கமுள்ள தே.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் சிவசுப்பிர மணியம் (வயது 42). அருகில் உள்ள பில்லனகுப்பம் பக்கமுள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (41). சிவசுப்பிரமணின், தனது சகோதரர் சக்திவேல் என்பவருடன் சேர்ந்து எம்.சாண்ட் மணல் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் திப்பிரெட்டி அள்ளியை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திருமணம் செய்யாமல் கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.

    இதில் சக்திவேல் அந்த ஆணுக்கு ஆதரவாகவும், சசிக்குமார் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 20-ந் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவசுப்பிரமணியம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள், ஒரு கார், 2 மோட்டார்சைக்கிள்களை 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். மேலும் சிவசுப்பிர மணியனின் கடைக்குள் புகுந்து நாற்காலிகள், மேசைகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்.இது குறித்து சிவசுப்பிரமணியன் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சசிக்குமார் (41), வதனோடி (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை உடைப்பது சத்தம் கேட்டு வெளியே பார்த்தார்.
    • போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது31). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்பக்கமாக பூட்டிவிட்டு தூங்க சென்றார்.

    அப்போது நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை உடைப்பது சத்தம் கேட்டு வெளியே பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் கதவின் உள்பக்கமாக பூட்டப்பட்ட பூட்டை உடைத்து உள்ள வந்தனர். உடனே முரளி திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். அப்போது மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    முரளியின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்கள் 2பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதுகுறித்து பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பிடிப்பட்டவர்கள் பாகலூரைச் சேர்ந்த மாரிமுத்து (22), பெலத்தூர் சிகாமணி (22) என்பதும், 2பேரும் சேர்ந்து முரளியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர் என்பதும் தெரியவந்தது.

    இதைத்ெதாடர்ந்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பாகலூரில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×