என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா
- நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
- வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டு பேசினர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கினார். கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி உதவி பேராசிரியை விக்னேஸ்வரி 'புத்தகங்கள் சிந்தனை நிரம்பிய பீரங்கிகள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டு பேசினர். விழாவில், புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவம், அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
உலக புத்தக தினத்தையொட்டி புத்தகக் கண்காட்சியும் நடந்தது. நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், வாசகர் வட்ட தலைவர் கமலேசன், நூலகர் பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






