என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரியில்எருது விடும் விழா
  X

  கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் நடந்த எருதுவிடும் விழாவில் சீறி பாய்ந்து ஓடிய காளையை படத்தில் காணலாம்.

  கிருஷ்ணகிரியில்எருது விடும் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டது.
  • 2 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு இடையே காளைகள் ஓடவிடப்பட்டன.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தும், 14-வது ஆண்டு மாபெரும் எருதுவிடும் விழா நேற்று நடந்தது.

  இவ்விழாவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சேலம், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோர கிராமங்களில் இருந்து 360-க்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் வாகனத்தில் அழைத்து வந்தனர்.

  முன்னதாக பர்கூர் தி.மு.க எம்.எல்.ஏ மதியழகன், கொடியசைத்து எருதுவிடும் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டது.

  ஒவ்வொரு காளைகளையும் நிர்யணம் செய்யப்பட்ட குறிப்பிட்ட தூரத்தை விநாடிகளில் கடக்கிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கீடு செய்யப்பட்டது.

  முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறையினர் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். வருவாய்த்துறை, போலீசார் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

  மேலும், 2 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு இடையே காளைகள் ஓடவிடப்பட்டன. இவ்விழாவில் முதல் பரிசாக ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 33ம், 2ம் பரிசாக ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 222ம், 3ம் பரிசாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 111 என மொத்தம் 53 ரொக்க பரிசுகள் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

  விழா நடைபெற்ற பழையபேட்டை நேதாஜி சாலையில் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  Next Story
  ×