search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனல்காற்று வீசுகிறது:கோடைவெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள வழிமுறைகள்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனல்காற்று வீசுகிறது:கோடைவெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள வழிமுறைகள்

    • பயணத்தின்போது உடன் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும்.
    • மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து தற்போது அனல்காற்று வீசுகிறது. இச்சமயங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பானங்கள் குடிக்க வேண்டும்.

    பயணத்தின்போது உடன் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் நிழல் தரும் கூரையின் கீழ் கட்டப்பட்டு இருப்பதையும், அவைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    வெயில் காலங்களில் கூரை வீடுகள் மற்றும் கொட்டகைகள் எளிதில் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விறகு அடுப்பு பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.

    மேலும், மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு 04343 -234444, 233077 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×