என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
- உடல் நிலை சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
- மனவிரக்தி அடைந்த கண்ணகி சம்பவத்தன்று வீட்டில் பூச்சி மருந்து மயங்கி கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு வண்ணம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணகி (வயது47). இவர் உடல் நிலை சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனவிரக்தி அடைந்த கண்ணகி சம்பவத்தன்று வீட்டில் பூச்சி மருந்து மயங்கி கிடந்தார். அவரை உடனே உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ண கிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story