என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடும்பத்துடன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
- முதல் மனைவியின் மகனான என்னுடைய அண்ணன் எனக்கு சொத்துக்களை தராமல் ஏமாற்றி வருகிறார்.
- இது குறித்து பலமுறை அவரிடம் கேட்டும் எனக்கு சொத்துக்கள் தராமல் இழுத்தடித்து வருகிறார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காேவரிப்பட்டணம் மிட்டஅள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
அப்போது கோவிந்தசாvமி கூறியதாவது:-
நான் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஅள்ளி சொந்த ஊராகும். என் தந்தைக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவியின் மகனான என்னுடைய அண்ணன் எனக்கு சொத்துக்களை தராமல் ஏமாற்றி வருகிறார். மேலும் போலி பத்திரம் தயாரித்து சொத்துக்கள் தர முடியாது என கூறுகிறார். இது குறித்து பலமுறை அவரிடம் கேட்டும் எனக்கு சொத்துக்கள் தராமல் இழுத்தடித்து வருகிறார். மேலும் இது குறித்து கேட்கும் பொழுது என்னுடைய மனைவியை தாக்கி உள்ளார். எனவே இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி கோவிந்தசாமியையும், அவரது குடும்பத்தையும் அனுப்பி வைத்தனர்.






