என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • முன்னால் டிராக்டர் திடீரென்று பிரேக் போட்டு நின்றது.
    • பச்சியப்பன் ஓட்டி சென்ற வண்டி நிலைத்தடுமாறி டிராக்டரின் பின்னால் சென்று மோதியது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 28).

    கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று பொட்டட்டி-லட்சுமிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது முன்னால் டிராக்டர் திடீரென்று பிரேக் போட்டு நின்றது. அப்போது பச்சியப்பன் ஓட்டி சென்ற வண்டி நிலைத்தடுமாறி டிராக்டரின் பின்னால் சென்று மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த பச்சியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
    • விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி மீனாட்சி (வயது 83).

    இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த பயனும் அளிக்காததால் மனவேதனை அடைந்தார். இதன்காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இளவரசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் உயிரிழந்தார்.

    இந்த கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு பணிப் பாதுகாப்பு கேட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தினேஷ் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோட்டச் செயலாளர் சங்கர், வட்டச் செயலாளர் முத்துராமன், வட்டத் தலைவர் சரவணன், பொருளாளர் இளவரசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

    முன்னதாக தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மரணத்திற்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் வீடு, காலி மனைகள் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    பொதுமக்களிடம் சுருட்டிய பணத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூருவில் மனைகள் மற்றும் வீடுகளை அருண்குமார் வாங்கியது விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவரிடம் இருந்து ரூ.3 கோடி சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள வசந்தம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் ஏ.கே.டிரேடர்ஸ் நடத்தி வந்த அருண்குமார் என்பவர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபர்களின் பணத்தை ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.

    அது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் சங்கர், சீனிவாசன், பிரகாஷ், ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கில் தலைமறைவாக இருந்த முதல் குற்றவாளியான அருண்குமார், வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மேற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், தருமபுரி இன்ஸ்பெக்டர் கற்பகம், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்ப) மஞ்சுளா மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    வேப்பனப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த அருண்குமார் பாகலூர் அருகே கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில் அருண்குமார் தனது பெயரிலும், மனைவி சந்திரா பெயரிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் வீடு, காலி மனைகள் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அருண்குமார் காரில் வைத்திருந்த ரூ.16 லட்சம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள கார், செல்போன், 7 பவுன் தங்க காப்பு, மூன்றரை பவுன் சங்கிலி மற்றும் அசையும் சொத்துக்கள் ரூ.45 லட்சத்து 65 ஆயிரமும், அசையா சொத்துக்கள் ரூ.2 கோடியே 56 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீஸ் விசாரணைக்கு பிறகு அருண்குமார், கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவரது மனைவி பிரதீபா செல்போனில் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
    • மனவேதனை அடைந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பகலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மலாத்தீவில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரதீபா (வயது35). அய்யப்பன் வெளிநாட்டில் வேலை செய்வதால் குடும்ப செலவிற்காக மாதந்தோறும் பணம் அனுப்பி வைப்பார். இந்த நிலையில் அய்யப்பன் கடந்த மாதம் குடும்ப செலவிற்காக பணம் அனுப்பாமல் இருந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிரதீபா செல்போனில் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரதீபா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல் கட்டமாக நேற்று முதல் 7.5.2023-வரை பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.
    • மேலும் நீச்சல் தெரிந்த நபர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 பணம் வசூலிக்கப்படும்.

    கிருஷ்ணகிரி 

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்டப்பிரிவு அலுவலகத்தின் வாயிலாக நீந்தக்கற்றுக்கொள்ளுதல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

    முதல் கட்டமாக நேற்று முதல், 7.5.2023-வரை பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இரண்டாம் கட்டமாக 9-ம் தேதி முதல் 21.5.2023-வரை , 3-ம் கட்டமாக 23- ம் தேதி முதல் முதல் 4.6.2023 வரை 12 நாட்களுக்கும் நடைபெற உள்ளது.

    பயிற்சி நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு நீச்சல் கற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சிக்கட்டணமாக ரூ.1200 ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் வசூலிக்கப்படவுள்ளது.

    மேலும் நீச்சல் தெரிந்த நபர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 பணம் வசூலிக்கப்படும்.

    எனவே, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயிற்சிக்கட்டணத்திற்கான விண்ணப்பத்தினை நீச்சல் குளத்தில் பெற்று கட்டணத்தொகையினை செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளு ம்மாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    மேலும், விவரங்களுக்கு நீச்சல்குள பணியாளர் தொலைபேசி எண் 9894234638, 7810039008 அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலரின் தொலைபேசி எண் 7401703487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப ்படுகிறார்கள். 

    • இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.
    • ஜவுளித் தொழில்முனைவோர்கள் அரசு மானியம் ரூ.2.50 கோடியுடன் கூடிய இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், துணிநூல் துறை சார்பாக சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டட தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

    இவ்வாறு அமைய உள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

    இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் அமைப்பு, நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திரிகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்), ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரகள் மற்றும் தளவாடங்கள் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

    சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான அரசு மனியம் பெறுதவற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் ஆகிய இனங்கள் சேர்ந்து ஆகும்.

    எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மேலும், ஜவுளித் தொழில்முனைவோர்கள் அரசு மானியம் ரூ.2.50 கோடியுடன் கூடிய இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அனுப்புவது மற்றும் இதர தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, 1ஏ-2/1, சங்ககிரி மெயின் ரோடு, குகை, செல்- 636 006 (தொலைபேசி எண். 0427-2913006), இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குநர் அம்சவேணி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி, ஊரக வாழ்வாதார இயக்கம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கடந்த 17-ந்தேதி அவரது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டனர்.
    • இவர்கள்தான் வனிதாவின் தாலி செயினை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சத்யநாராயணா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் தனது வீட்டில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அவரது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டனர்.

    தண்ணீர் பாட்டிலை எடுக்க வனிதா திரும்பிய போது, அந்த நபர்கள் திடீரென வனிதாவை கீழே தள்ளி, அவர் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலி செயினை பறித்து க்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த வனிதா, இது குறித்து ஓசூர்அட்கோ போலீசில் புகார் செய்தார்.

    புகாரை பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில், நேற்று மாலை, ஓசூர்- நல்லூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் போது அந்த வழியாக ஒருமோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் சந்தாபுரா அருகேயுள்ள பன்னஹள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் (31) மற்றும் தும்கூரு அருகே கொரட்டஹள்ளியை சேர்ந்த சிவகுமார்(31) என்பதும், இவர்கள்தான் வனிதாவின் தாலி செயினை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, தாலி செயினையும் பறிமுதல் செய்தனர்.

    • 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.
    • புதிய கழிவு நீர் கால்வாய் கட்ட ரூ.15 லட்சம் மதிப்பிட்டிலும் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் கண்ணன் ட அள்ளி ஊராட்சி தோளனூர் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட ரூ.19 லட்சம் மதிப்பீட்டிலும், அதே போல் கண்ணன்டஹள்ளி பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய கழிவு நீர் கால்வாய் கட்ட ரூ.15 லட்சம் மதிப்பிட்டிலும் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெகன், ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, கந்தசாமி, கண்ணன்ட அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் மோகன் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் கலைச்செல்வி பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில், உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
    • வாசகர்கள், புரவலர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில், உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

    தனியார் அறக்கட்டளை மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட பொருளாளர் ஜெகந்நாதன் தலைமை தாங்கினார். ஓசூர் அரசு கல்லூரி பேராசிரியர் பொன்ஜெயந்தி மற்றும் அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவில் பேசினர் .விழாவின்போது, நூலக புரவலர்களுக்கு, புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.

    இதில், வாசகர்கள், புரவலர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் ரேணுகா சக்திவேல் நன்றி கூறினார்.

    • முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர்.
    • போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து நேற்று இரவு கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனம் தொடங்கி யுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோ கரன்சி முறையில் 7 லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.

    அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது. அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் திருவண்ணாமலை வேலூர், தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

    முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர். பின்னர் வாரக்கணக்கில் பணம் வழங்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளி என அருண்குமார் தலைமறைவாகி இருந்தார்.

    மீதமுள்ள 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்த அருண்குமார் தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார்.

    இதனை அறிந்த போலீசார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து நேற்று இரவு கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அவர் கிரிப்டோ கரன்சி மூலம் அந்த நிறுவனம் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார்.

    எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    • அங்குள்ள ரெயில்வே பாலம் அருகே உள்ள பனைமரத்தில் ஏறினார்.
    • மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்டம் மேச்சேரி வெள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது27). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி குன்னத்தூருக்கு வந்திருந்தார்.

    அப்போது அங்குள்ள ரெயில்வே பாலம் அருகே உள்ள பனைமரத்தில் ஏறினார். இதில் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த கார்த்திகேயன் பலத்த காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சாமல்பட்டி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×