search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜவுளி தொழில் முனைவோர்களுக்கானவிழிப்புணர்வு கூட்டம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது.

    ஜவுளி தொழில் முனைவோர்களுக்கானவிழிப்புணர்வு கூட்டம்

    • இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.
    • ஜவுளித் தொழில்முனைவோர்கள் அரசு மானியம் ரூ.2.50 கோடியுடன் கூடிய இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், துணிநூல் துறை சார்பாக சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டட தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

    இவ்வாறு அமைய உள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

    இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் அமைப்பு, நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திரிகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்), ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரகள் மற்றும் தளவாடங்கள் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

    சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான அரசு மனியம் பெறுதவற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் ஆகிய இனங்கள் சேர்ந்து ஆகும்.

    எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மேலும், ஜவுளித் தொழில்முனைவோர்கள் அரசு மானியம் ரூ.2.50 கோடியுடன் கூடிய இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அனுப்புவது மற்றும் இதர தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, 1ஏ-2/1, சங்ககிரி மெயின் ரோடு, குகை, செல்- 636 006 (தொலைபேசி எண். 0427-2913006), இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குநர் அம்சவேணி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி, ஊரக வாழ்வாதார இயக்கம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×