என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
- முன்னால் டிராக்டர் திடீரென்று பிரேக் போட்டு நின்றது.
- பச்சியப்பன் ஓட்டி சென்ற வண்டி நிலைத்தடுமாறி டிராக்டரின் பின்னால் சென்று மோதியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 28).
கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று பொட்டட்டி-லட்சுமிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது முன்னால் டிராக்டர் திடீரென்று பிரேக் போட்டு நின்றது. அப்போது பச்சியப்பன் ஓட்டி சென்ற வண்டி நிலைத்தடுமாறி டிராக்டரின் பின்னால் சென்று மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பச்சியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






