என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில், கிராம நிர்வாகஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இளவரசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் உயிரிழந்தார்.
இந்த கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு பணிப் பாதுகாப்பு கேட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தினேஷ் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோட்டச் செயலாளர் சங்கர், வட்டச் செயலாளர் முத்துராமன், வட்டத் தலைவர் சரவணன், பொருளாளர் இளவரசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
முன்னதாக தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மரணத்திற்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.