கால பைரவர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக சுகாதார வளாகம்

பெரிய ஏரிக்கரையில் கால பைரவர் கோவில் உள்ளதுகோவிலின் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.
கால பைரவர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக சுகாதார வளாகம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் கால பைரவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இங்கு பக்தர்களின் வசதிக்காக ரூ.10 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு கோவிலின் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.

இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் அறக்கட்டளை கவுரவவத் தலைவர் பி.சேகர், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், அறக்கட்டளை தர்மகர்த்தாக்கள் கிருஷ்ண மூர்த்தி, பைரேஸ், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன், பொருளாளர் சங்கர், செயலாளர் கணேசன், இயக்குனர்கள் சுப்பிரமணி, கோபால்,கிருஷ்ணன், நம்பிராஜ், கோவில் பூசாரி அரி, பவுன்ராஜ், நாகேந்திரன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com