என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருளை கிழங்கு அறுவடை"

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு 50 கிலோ எடை கொண்ட உருளை கிழங்கு மூட்டையானது ரூ.400-க்கு விற்பனையானது.
    • தற்போது ரூ.600-க்கு விற்பனையாவதால் விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த வருடம் நல்ல மழை பெய்ததால் விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதி உள்ளது.

    இதனையடுத்து பேரிகை, காட்டு நாயக்கனதொட்டி, பி.எஸ், திம்மசந்திரம், ஆலுர், அத்திமுகம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் உருளை கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இவர்கள் 3 மாதத்திற்கு முன்பு உருளை கிழங்கை நடவு செய்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 50 கிலோ எடை கொண்ட உருளை கிழங்கு மூட்டையானது ரூ.400-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.600-க்கு விற்பனையாவதால் விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.

    இருப்பினும் விளைந்த உருளை கிழங்குகள் சில தினம் முன்பு பெய்த கோடை மழையின் காரணமாக அழுகல் ஏற்பட்டுள்ளதால் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். 

    ×