என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி தொழிலாளி சாவு
- எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக சாம்ராஜ் மீது மோதியது.
- சிகிச்சை சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது54). கூலித்தொழிலாளி.
சம்பவத்தன்று தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சப்பானிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக சாம்ராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story