என் மலர்
கிருஷ்ணகிரி
- வீட்டில் ஈர துணியை கம்பியில் காய வைத்துள்ளார்.
- மின்சாரம் தாக்கியதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அரசகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் ஈர துணியை கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பள த்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
- சட்டவிதிமுறைகளை பின்பற்றாத 35 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 70 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பள த்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காதபட்சத்தில், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
இது குறித்த விவரங்கள் மாவட்ட தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெங்கடாசலபதி தலைமையில் அதிகாரிகள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி நகரில் உள்ள 94 நிறுவனங்களில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டம், விதிகளின் கீழ் ஆய்வு செய்தனர்.
இது குறித்து உதவி ஆணையர் வெங்கடாசலபதி கூறியதாவது:-
இந்த சிறப்பு ஆய்வின் போது 48 கடைகள், 46 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 94 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சட்டவிதிமுறைகளை பின்பற்றாத 35 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 70 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு கட்சி அமைப்புகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.
- விவசாய உபகரணங்கள் களப்பை யில் கருப்பு கொடியை கட்டி பறக்க விட்டு 118-வது நாளாக உத்தனப்பள்ளி காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்களம் ஊராட்சிகளில் விளை நிலப்பகுதிகளில் நிலம் எடுபபதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சி அமைப்புகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய உபகரணங்கள் களப்பை யில் கருப்பு கொடியை கட்டி பறக்க விட்டு 118-வது நாளாக உத்தனப்பள்ளி காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
- கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் 17-வயது மாணவி. இவர் கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- மனமுடைந்து காணப்பட்ட மல்லிகாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி மல்லிகாமேரி (வயது54). இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மல்லிகாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோடை வெயிலின் தாக்கம், மாநிலம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
தேன்கனிகோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கோடை வெயிலின் தாக்கம், மாநிலம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், வெயில் சுட்டெரித்து வருகிறது.
இன்னும் கத்திரிவெயில் தொடங்காத நிலையில், 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. மேலும் இப்பகுதியில் 52மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெயில் கொளுத்தி வந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.
- போலீசார் காமராஜ் நகர் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தனர்.
- கஞ்சா கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் காமராஜ் நகர் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தனர்.
அங்கு கஞ்சா கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை விற்றதாக ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்த ஜாஜாடிகிஷோர் பேகேரா (32) என்வெரை போலீசார் கைது செய்தனர்.
அவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 700 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் பெட்டமுகிலாளம் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
தேன்கனிக் கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை போலீசார் பெட்டமுகிலாளம் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மல்லேசா (27), பெட்டமுகிலாளம் அருகே உள்ள கோட்டையூர்கொல்லை என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரி விஜயன் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 5 தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ராம் நகர் அண்ணாசிலையருகில் நிறைவடைந்தது.
ஓசூர்,
ஓசூரில், மே தினத்தை முன்னிட்டு, தனியார் தொழிற்சாலைகளின், 5 தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக ஓசூர் தாலுகா அலுவலகம் அருகில் இருந்து பேரணி தொடங்கியது. இதனை, தொழிற்சங்க நிர்வாகி ராதா தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ராம் நகர் அண்ணாசிலையருகில் நிறைவடைந்தது.
பின்னர், அங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு, முனியப்பன் தலைமை தாங்கினார். பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சந்திரசேகர், சக்திவேல், காளிங்கன், மாதேஷ், வனவேந்தன், குமணன் ஆகியோர் பேசினர். முடிவில், பாபு நன்றி கூறினார்.
- விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு காயம் இன்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
- விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரை நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி இன்றுகாலை ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் பஸ் நிலையம் எதிரில் வந்த போது திடீரென மேம்பாலத்தில் தடுப்பு சுவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
பின்னர் இந்த விபத்தில் சிக்கிய டிப்பர் லாரி, முன்னால் சென்ற ராமேஸ்வரத்திலிருந்து பெங்களூர் சென்ற கர்நாடகா தனியார் ஆம்னி பேருந்து, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மற்றும் கேரளாவில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்து என மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு காயம் இன்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை சரி செய்து, மூன்று பேருந்துகளிலும் இருந்த பயணிகளை மாற்று பேருந்து மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கு டிப்பர் லாரி தான் காரணம் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- ராகவன் வரும் பசு ஒரே சமயத்தில் 2 ஆண் கன்றுகளை ஈன்றது.
- அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராகவன் வரும் பசு ஒரே சமயத்தில் 2 ஆண் கன்றுகளை ஈன்றது. தற்போது பசு ஈன்றுள்ள 2 ஆண் கன்றுகளும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.






