என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் கொட்டி தீர்த்த மழை
- கோடை வெயிலின் தாக்கம், மாநிலம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
தேன்கனிகோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கோடை வெயிலின் தாக்கம், மாநிலம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், வெயில் சுட்டெரித்து வருகிறது.
இன்னும் கத்திரிவெயில் தொடங்காத நிலையில், 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. மேலும் இப்பகுதியில் 52மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெயில் கொளுத்தி வந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.






