என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் அரசு, தனியார் பஸ்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்து
    X

    ஓசூரில் அரசு, தனியார் பஸ்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

    • விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு காயம் இன்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
    • விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரை நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி இன்றுகாலை ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் பஸ் நிலையம் எதிரில் வந்த போது திடீரென மேம்பாலத்தில் தடுப்பு சுவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    பின்னர் இந்த விபத்தில் சிக்கிய டிப்பர் லாரி, முன்னால் சென்ற ராமேஸ்வரத்திலிருந்து பெங்களூர் சென்ற கர்நாடகா தனியார் ஆம்னி பேருந்து, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மற்றும் கேரளாவில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்து என மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு காயம் இன்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை சரி செய்து, மூன்று பேருந்துகளிலும் இருந்த பயணிகளை மாற்று பேருந்து மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கு டிப்பர் லாரி தான் காரணம் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×