என் மலர்
கிருஷ்ணகிரி
- ஏரிகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
- பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி க்கோட்டை தாலுகா பேளகொண்ட ப்பள்ளியில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் 13 கோடியே 75 லட்சம் மதிப்பில் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தடிக்கல் ஏரி, மல்லிகார்ஜீன துர்க்கம் ஏரி, அடவங்கா ஏரி, பெத்தசெருவு ஏரி, ஜவளநாயக்கன் ஏரி, நாகேந்திரன் ஏரி, லட்சுமி கவுண்டன் ஏரி மற்றும் சூளகிரி தாலுகாவில் உள்ள பன்னப்பள்ளி ஏரி ஆகிய ஏரிகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதற்கான பணிகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்எல்ஏக்கள் ஓசூர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) குமார், மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) உதயகுமார், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், பார்த்தீபன், பொன்னிவள வன், ராதிகா, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, மாவட்ட கவுன்சிலர் மம்தா, ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமி எல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், தாசில்தார் சரவணன மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், நாக ரத்தினம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நெல் விளைச்சல் அமோகமாக விளைந்து உள்ளது.
- பகல் நேரங்களில் விளைந்த நெல் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரங்களான கீரண ப்பள்ளி, பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி, அத்தி முகம், மேடுபள்ளி, கோபசந்திரம், காமன்தொட்டி, பேரிகை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நெல் விளைச்சல் அமோகமாக விளைந்து உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மழையில் நெல்பயிர் சேதம் வந்து விடாமல் பகல் நேரங்களில் விளைந்த நெல் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.
- ஓசூரில் நேற்று மெழுகுவர்த்தி எந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா தலைமை தாங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனையருக்கு நீதி கேட்டு, ஓசூரில் நேற்று மெழுகுவர்த்தி எந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் - தளி சாலையில் பட்டாளம்மன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கலந்துகொண்டு, கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாநகர தலைவர் தியாகராஜன், கலந்துகொண்டனர்.
- கழிவு நீர் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஒரமாக அமைத்தனர்.
- சாலையில் செல்வோர்கள், வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிபட்டு வந்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டாரத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட சூளகிரி-கும்பளம் சாலையில் பகுதியில் கழிவு நீர் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஒரமாக அமைத்தனர்.
ஆனால் சிறிய தூரம் மட்டுமே அமைத்து விட்டு சென்றனர். சில இடங்களில் கால்வாய் சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர், மழை நீர் சாலையிலேயே பெருக்கெடுத்து செல்வதால் சாலை ஓர குடியிருப்புகள் வீட்டின் முன்பும், பின்பும் தேங்கி நிற்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவு அபாயம் உள்ளது. பல சில ஆண்டுகளாக கொசு தொல்லையிலும் மற்றும் தற்போது தொடர் மழையால் அதிக அளவு மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி வரதன், பொதுமக்கள் முருகேசன், ராமனன், மற்றும் பலர் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று அலுவலர் விமல் ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து நேற்று உடனே நடவடிக்கை மேற்கொண்டு மதியம் சம்பவ இடத்தை சூளகிரி வட்டரவளர்சி அலுவலர் விமல் ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் டென்சிங் ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்களிடம் கூறுகையில் நெடுஞ்சாலைதுறை அதிகாரியிடம் பேசி புதிய கால்வாய் அமைத்து கழிவு நீர் சீராக செல்ல வழி வகுக்க உள்ளதாக கூறினர்.
- மாநிலமே வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதால், மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
- மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நகர தி.மு.க. சார்பில், திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதாநவாப் வரவேற்றார்.
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, நகர அவைத்தலைவர் மாதவன், நகர துணை செயலாளர் பொன்.குணசேகரன், அரங்கண்ணல், மீனா நடராஜன், ஜான்டேவிட்ராஜ், சுகுமார், திருமலைச்செல்வன், அமீர்சுஹேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்சியில் அனைத்து குடும்பத்தினரும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து வருகின்றனர். மாநிலமே வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதால், மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக தாய்மார்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்து வரும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் என்னென்றும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- அங்கு சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
- சிவானந்தா தந்தை என்றும் பாராமல் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புக்கசாகரம் திப்பேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணப்பா (வயது90). விவசாயி. இவருடைய மனைவி பாப்பம்மா. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். மேலும் வெங்கட்ரமணப்பாவிற்கு சொந்தமாக 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மகன்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து சொத்து பிரிப்பு தொடர்பாக வெங்கட்ரமணப்பாவுக்கும், மூத்த மகன் சிவானந்தாவுக்கும் (45) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சிவானந்தா தனது தந்ைத மீது ஆத்திரத்தில் இருந்தார்.
இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவானந்தா தந்தை வெங்கட்ரமணப்பாவை வீட்டுக்கு அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தனியாக அழைத்து சென்றார்.
அப்போது அங்கு சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவானந்தா தந்தை என்றும் பாராமல் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்டு கிடந்த வெங்கட்ரமணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய சிவானந்தாவை நேற்று கைது செய்தனர். கைதான அவரை ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 43.15 அடியாக உள்ளது.
- அணையின் நீர் இருப்பை 43 அடியாக குறைக்க முடிவு செய்து, கடந்த 21ம் தேதி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த 5-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 496 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 261 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 43.15 அடியாக உள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீர்தேக்க பின்பகுதியில் 15 ஊராட்சிகள் பயன்பெறும், கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்காகக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
இப்பணிக்காக அணையின் நீர் இருப்பை 43 அடியாக குறைக்க முடிவு செய்து, கடந்த 21ம் தேதி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், இத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நீர்இருப்பு குறைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வருகிற 13-ம் தேதிக்கு பின்பு மீண்டும் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
- கள்ளத்தனமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- அவரிடம் இருந்து 227 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மிட்டப்பள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது52) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 227 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.
- பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரில் உள்ள மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா மற்றும் ஊர் பண்டிகை நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஓசூரில், ஆண்டுதோறும் கோட்டை மாரியம்மன் கோவில் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி, கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதம் மேற்கொண்டனர்.
விழா நாளான நேற்று, பொதுமக்கள் திரள், திரளாக கோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பெண்கள் பால் குடம், மாவிளக்கு ஏந்தியவாறும் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூஜைகள் நடத்தினர்.
மேலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் முதுகு, கன்னம் ஆகிய பகுதிகளில் அலகு குத்தியவாறும், அந்தரத்தில் தொங்கியவாறும் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் விழாவையொட்டி, நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாவிளக்கு திருவிழாவை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) இரவு பூ மிதித்தல், சிடி உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.
- மேம்பாலம் மீது லாரி சென்றபோது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் வேகமாக லாரி மீது மோதியது.
- இதில் டிரைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
ஓசூர்,
பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி இரும்பு காயில் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது இன்று அதிகாலை 4.30 மணியளவில், ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள தனியார் கண் மருத்துவமனை பக்கமாக மேம்பாலம் மீது லாரி சென்றபோது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் வேகமாக லாரி மீது மோதியது. இந்த பஸ், பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி சென்றதாகும்.
இந்த விபத்தில், சேந்தமங்கலத்தை சேர்ந்த பஸ் டிரைவர் தமிழ்செல்வன் (47), மற்றும் கண்டக்டர் சிவகுமார்(49) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, காமன்தொட்டி, கோனேரி ப்பள்ளி, கானலட்டி, பாத்த கோட்டா, எர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, செம்பரசன ப்பள்ளி, போடூர், திருமலை க்கோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், பங்காநத்தம், காவேரிநகர், தாசன்புரம், தோரிப்பள்ளி, கல்லுகுறுக்கி, பேட்டகானப்பள்ளி, ராமாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெட்டியூர் பகுதியில் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தி வருவதாக பாலக்கோடு போலீஸ் இன்ஸ்ெபக்டர் கோகுலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- கஞ்சா செடியை பயிரிடதற்காக தர்மனை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஏர்னஅள்ளி, ரெட்டியூர் பகுதியில் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தி வருவதாக பாலக்கோடு போலீஸ் இன்ஸ்ெபக்டர் கோகுலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் தர்மன் (வயது30) என்பவர் தனது வீட்டில் 1½ அடி உயரமுள்ள கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்தது.
உடனே அந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். கஞ்சா செடியை பயிரிடதற்காக தர்மனை போலீசார் கைது செய்தனர்.






