என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான லாரி, கிரேன் மூலம் அப்புறப்படுத்தியபோது எடுத்த படம்.
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
- மேம்பாலம் மீது லாரி சென்றபோது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் வேகமாக லாரி மீது மோதியது.
- இதில் டிரைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
ஓசூர்,
பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி இரும்பு காயில் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது இன்று அதிகாலை 4.30 மணியளவில், ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள தனியார் கண் மருத்துவமனை பக்கமாக மேம்பாலம் மீது லாரி சென்றபோது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் வேகமாக லாரி மீது மோதியது. இந்த பஸ், பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி சென்றதாகும்.
இந்த விபத்தில், சேந்தமங்கலத்தை சேர்ந்த பஸ் டிரைவர் தமிழ்செல்வன் (47), மற்றும் கண்டக்டர் சிவகுமார்(49) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






