என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவிளக்கு திருவிழா"

    • பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரில் உள்ள மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா மற்றும் ஊர் பண்டிகை நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    ஓசூரில், ஆண்டுதோறும் கோட்டை மாரியம்மன் கோவில் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி, கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதம் மேற்கொண்டனர்.

    விழா நாளான நேற்று, பொதுமக்கள் திரள், திரளாக கோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பெண்கள் பால் குடம், மாவிளக்கு ஏந்தியவாறும் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூஜைகள் நடத்தினர்.

    மேலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் முதுகு, கன்னம் ஆகிய பகுதிகளில் அலகு குத்தியவாறும், அந்தரத்தில் தொங்கியவாறும் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் விழாவையொட்டி, நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாவிளக்கு திருவிழாவை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) இரவு பூ மிதித்தல், சிடி உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.

    ×