என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயத்திற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

    விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயத்திற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி, ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வழங்கப்படும்.

    பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை, ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதத்தில் வழங்கப்படும்.

    நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும், ஆண்டு வட்டி 4 சதவீதம் என வழங்கப்படுகிறது.

    மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டி ருக்க வேண்டும்.

    ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை, ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

    கடன் பெற விருப்பமுள்ள வர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டைமற்றம் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (அறை எண்.13), கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவண ங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.
    • குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்கள் மறு ஆய்வு செய்த பிறகு தான் இயக்கப்பட வேண்டும்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட போக்கு வரத்து அலுவலர்கள், தனியார் பள்ளி பஸ்களை வருடாந்திர கூட்டாய்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

    இந்த ஆய்வில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி, ஆர்.டி.ஓ. பாபு, ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன், தாசில்தார் திருமலைராஜன்,பிரேக் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் விளக்கி கூறினர். பிறகு 125 பஸ்களை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறு குறைகள் இருந்த, 18 பஸ்களை, தங்கள் குறைகளை சரிசெய்து கிருஷ்ணகிரி அலுவலகத்திற்க்கு சென்று மறு ஆய்வு செய்த பிறகு தான் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.டீ.ஓ. காளியப்பன் கூறினார். ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட் டல் விடுத்தார்.
    • கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் கணேசன் தலைமை யிலான போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டி ருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட் டல் விடுத்தார். மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் காவலர் கணேசன் புகார ளித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர். விசாரனை செய்து வழக்குபதிவு செய்து ஒசூர் சிறைசாலையில் அடைத்தனர்

    • முதல்கால வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜையும், இரவு தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.
    • அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மகாபிஷேகம் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், ருத்ர பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், சாமிக்கு மகாதீபாரதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. மாலை விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், 108 கலச ஸ்தாபனம், 108 சங்கஸ்தாபனம், முதல்கால வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜையும், இரவு தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.

    நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜைகள், தீபாரதனையும், காலை 10.35 மணிக்கு சாமிக்கு 108 குடம் கலசாபிஷேகம், அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மகாபிஷேகம் நடந்தன. மதியம் 12.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் என்பவரை கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் கணேசன் தலைமையிலான போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் காவலர் கணேசன் புகாரளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர். போலீசார் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து ஓசூர் சிறைசாலையில் அடைத்தனர் .

    • செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
    • உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு , உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மாநகராட்சியில் உரிமம் பெறுவதற்கு,வாகன உரிமையாளர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, ரூ.2,000- கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம், வாகனங்களுக்கு வழங்கப்படும்.

    உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்குவது கண்டறியப்பட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவை பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற எக்காரணத்தை கொண்டும் மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

    இந்த பணிக்காக ஏற்கனவே ஓசூர் மாநகராட்சி பகுதியில், 18 வாகனங்கள் உரிமம் பெற்றுள்ளன. அந்த வாகனங்களை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் பயன்படுத்திக ்கொள்ளலாம்.

    இவ்வாறு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    • முதியோர் உதவி தொகை, உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 242 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
    • 16 பேருக்கு ரூ.49 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சாலை வசதி, மின்சார வசதி, முதியோர் உதவி தொகை, உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 242 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 பேருக்கு ரூ.49 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குருபரப்பள்ளி அருகே சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தவறான புகார் அளித்தது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    பர்கூரை அடுத்த தண்ணீர்பள்ளத்தை சேர்ந்தவர், 13 வயது சிறுமி; மஜீத்கொல்லஹள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர்கள் 2 பேரும் கடந்த 26&ந் தேதி காலை ஜிட்டோபனப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி மத்தூர் சாலையில் நடந்து சென்ற போது எதிரில் வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதி சென்றது. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிந்து, இடித்து தள்ளிய காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த கார் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள ஒரு மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டது தெரிய வந்தது.- போலீசார் அங்கு சென்று காரை பறிமுதல் செய்ய முயன்ற போது அதே நாளில் மாலை குருபரப்பள்ளி அருகே சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டது தெரிய வந்தது.

    2 பேரை இடித்து தள்ளிய கார், விபத்துக்குள்ளான காருக்கு இன்சூரன்ஸ் கிடைக்க புளிய மரத்தில் மோதி ஒரு புகார் அளித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து போலீசார் கூறும் போது குருபரப்பள்ளியில் அளித்த புகாரின் பேரில் சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தவறான புகார் அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து புகார் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.

    • காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராதா, காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனார். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தொடக்க உரையாற்றினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்டத் தலைவர்கள் ஜெய்சங்கர், சரவணன், மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் சிறப்புரை ஆற்றினர்.

    மாநில துணைத் தலைவர் மஞ்சுளா நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.

    இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல் அமைச்சரின் தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலைச் சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில், 200 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம்.
    • தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த உயரம் 52 அடியாகும் (1666.26 மில்லியன் கன அடி). நேற்று (29ம் தேதி) நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 48.25 அடியாக (1262.11 மில்லியன் கனஅடி) உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 456 கன அடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே பொதுமக்கள், ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம். அதே போல தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம். குளிப்பதற்கோ, காலை கடன்களை கழிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ ஆற்றுக்கு செல்ல வேண்டுமா எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கிருஷ்ணகிரி அணை இடதுபுறம் நீட்டிப்பு பாளேகுளி - சந்தூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறியது, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பாலேகுளி ஏரி முதல் வேலம்பட்டி, வீரமலை வழியாக சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    தற்போது, அணையில் இருந்து இடது புறக்கால்வாய் வழியாக உபரிநீர் பாலேகுளி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். பின்னர், அங்கிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் கால்வாய் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    • தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
    • தஞ்சாவூரில் போலி மதுபானங்களால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் நடந்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே காவல்துறையை கையில் எடுத்துக் கொண்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி உள்ளது. கள்ளச்சாராயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலர் இறந்துள்ளனர். தஞ்சாவூரில் போலி மதுபானங்களால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ., படுகொலை செய்யப்பட்டுள்ளார். கரூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். சி.பி.ஐ., ரெய்டு குறித்து போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவில்லை என கூறுகிறார்.

    இதற்கெல்லாம் பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

    ஏற்கனவே மின்கட்டணம், சொத்து வரி, பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. தற்போது தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் இது போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தற்போது ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க., தமிழைப் பற்றியும், சோழர்களை பற்றியும் பேசிவிட்டு, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நாடா ளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை, புறக்கணித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மேற்கு அ.தி.மு.க சார்பில், திமுக அரசை கண்டித்து ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி, கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

    மேலும், கள்ளச்சாராயத்தால், பல உயிர்களை பலி வாங்கியதாக, தி.மு.க அரசை கண்டித்தும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு, அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் கண்டனம் தெரிவித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் இதில், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், மாவட்ட துணைசெயலாளர் மதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், மஞ்சுநாத், கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் நடராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இதைவிட தமிழர்களுக்கு ஒரு பெருமை உண்டா? என்றால் இல்லையென்றே சொல்லலாம்.

    தி.மு.க., தமிழைப் பற்றியும், சோழர்களை பற்றியும் பேசிவிட்டு, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நாடா ளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை, புறக்கணித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

    இந்த செயல், அவர்களுக்கு தமிழ்ப்பற்று இல்லை என்பதையே காட்டுகிறது. கரூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். அதனை திசை திருப்பவும், ஊழலை மறைக்கவுமே, தி.மு.க. முயன்று வருகிறது.

    செந்தில்பாலாஜி, அந்த முகாமிலிருந்து வெளியேற்ற ப்படும் காலம் நெருங்கி விட்டது. ரெய்டுக்கு வந்த மத்திய அரசு அதிகாரிகளை, அடித்து உதைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த விடியா ஆட்சி, விரைவில் அகன்று, தமிழக மக்களுக்கு புதிய விடியல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×