என் மலர்
கிருஷ்ணகிரி
- வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
- குமரவேல், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
குருபரபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திலகம் மற்றும் பணியாளர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏஜி ஜாய் சுரேஷ் குமார் (கனரா வங்கி மேலாளர்- ஓய்வு) மற்றும் மல்லபாடி மக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் குமரவேல், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
- 30 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்
- மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருத்திற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.
கிருஷ்ணகிரி,
முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் கலை விருகள் பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2002-2003-ம் ஆண்டு முதல் 2021-2022-ம் ஆண்டு வரையில் 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.
2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கிருஷ்ணகிரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக இம்மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி மலை இளமணி விருது 18 வயதும், அதற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை வளர்மணி விருது 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை சுடர்மணி விருது 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை நன்மணி விருது 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை முதுமணி விருது 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருத்திற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. இதற்கு முன்னர் மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்திருந்த கலைஞர்கள் 2022-23 மற்றம் 2023-24ம் ஆண்டு விருது தேர்விற்கு தங்களது ஒப்புதல் வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3, மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பப்பாட்டு மையம், ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம் பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 636 302 என்ற முகவரிக்கு வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2386197 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஹரிஷா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- தினேஷ் பஞ்சு (24) என்பவர் தனது மகளை கடத்தி சென்றி ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மத்தூரை அடுத்த கண்ணன்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஹரிஷா (வயது21). இவர் நேற்று கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஹரிஷா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து நாராயணன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தினேஷ் பஞ்சு (24) என்பவர் தனது மகளை கடத்தி சென்றி ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆவின் பாலுக்கு 10 ரூபாய் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்
- தமிழகத்திற்குள் அமுல் நிறுவனத்தைக் கொண்டு வர வேண்டாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, மாவட்ட துணைத் தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் என்பது இல்லை. கர்நாடகா மாநில வனப்பகுதியான பன்னார்கட்டாவில் யானைகள் உள்ளன. அங்குள்ள வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் கனிம வளத்தையும், வன வளத்தையும் கொள்ளை யடிக்கின்றனர்.
அதனால் யானைகள் அங்கிருந்து கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்துவிடுகின்றன. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்தும், வனத்துறையினர் சரியாக நடவடிக்கை எடுக்காமல் யானைகளை விரட்ட லஞ்சம் வாங்குகின்றனர்.
5 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் விவசாயிகளின் தோட்டத்திற்குள் யானைகள் வராதவாறு வனத்துறை அதிகாரிகள் பார்த்துக் கொள்கின்றனர். யார் பணம் கொடுக்கவில்லையோ அவர்களின் நிலங்களுக்கு யானைகளை விரட்டிவிடுகின்றனர்.
ஆவின் பாலுக்கு 10 ரூபாய் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டு வருகின்றனர். ஆனால் அதைக் கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. அமுல் நிறுவனத்தினர் பாலுக்கு விலை கொடுக்க தயாராகி வருகின்றனர். தமிழகத்திற்குள் அமுல் நிறுவனத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது சரியான நடவடிக்கை இல்லை. பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். தமிழக அரசு அதைத்தான் செய்ய வேண்டுமே தவிர ஒரு அரசு நிறுவனத்தை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் அசோக் குமார், மாவட்ட துணை செயலாளர் சக்திசங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திடீரென்று கட்டிங் மிஷினில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே கதிர்ப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள கால்நடை பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணையில் மாடுகளுக்கு தேவையான தீவனம் வைப்பதற்காக ராஜப்பா அங்குள்ள செடிகளை கட்டிங் மிஷின் மூலம் வெட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டிங் மிஷினில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் பிரேமா வேப்பனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருமுன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவ லர் ராஜேஷ்குமார் தலை மையில், தாசில் தார் சரவணமூர்த்தி முன்னி லையில் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்துறை அலுவலர்க ளுக்கு வருமுன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவ லர் ராஜேஷ்குமார் தலை மையில், தாசில் தார் சரவணமூர்த்தி முன்னி லையில் நடைபெற்றது.
முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, பொது மருத்துவ சிகிச்சை, சித்த மருத்துவ சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
முகாமில் 250-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் கெலமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள் கோபி, சரவணகுமார், சசிகலா, சுப்பிரமணி, கண் மருத்துவ உதவியாளர் டேவிட், செல்வபாண்டியன், மேற்பார்வையாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் தேன்கனி க்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மனோ கரன், வனச்சரக அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுகாதார மேற் பார்வை யாளர் சிவ குருநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், ரங்கநாதன், அசோக்குமார், நவீன் ஆகியோர் ஏற்பாடு களை செய்தி ருந்தனர்.
- ஓசூரில் 8, கிருஷ்ணகிரியில் 1 என ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 9 நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
- நகர்ப்புற நல மையத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி வைத்தார். நகர்ப்புற நல மையத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி வைத்தார்.
ஓசூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையி லிருந்து, காணொளி காட்சி வாயிலாக ஓசூரில் 8, கிருஷ்ணகிரியில் 1 என ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 9 நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஓசூர்-தளி சாலையில் கணபதி நகரில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல மையத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி வைத்தார்.
விழாவிற்கு, டாக்டர் செல்ல குமார் எம்.பி., ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் விழாவில், மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சுகதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படும் நிலைமை இருந்து கொண்டுள்ளது.
- மாங்கனிகளை விளைவிப்பவர்களே அதற்கான விலையை நிர்ணயிக்கக்கூடிய நிலை தமிழகத்தில் வர வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மாங்கனி விலையை நிர்ணயம் செய்யக்கோரி, தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வேலுசாமி தலைமை தாங்கினார்.
பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் இளங்கோ, ஆறுமுகம், கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர்கள் தியாகராஜ்நாயுடு, அண்ணாமலை, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சவுந்தரராஜன், கே.ஆர்.பி., அணை உபரிநீர் நீடிப்பு இடது புற கால்வாய் பயன்பெறுவோர் சங்கத் தலைவர் சிவகுரு, முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் குமார், புல்லட் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் ஆலயமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படும் நிலைமை இருந்து கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதுகெலும்பு தொழிலாக இருந்து கொண்டிருப்பது மா விவசாயம். இது ஒரு வறண்ட மாவட்டம்.
அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக விளங்கக்கூடிய இந்த மாங்கனி தொழிலை கண்டு கொள்ளாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மாங்கனிகளை விளைவிப்பவர்களே அதற்கான விலையை நிர்ணயிக்கக்கூடிய நிலை தமிழகத்தில் வர வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஏரிக்கரைகள், சாலை யோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் நடும் பணிகள் நடைபெற்றது.
- தென்னை கன்றுகள் உட்பட சில்வர் ஹூக் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரைகள், சாலை யோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் நடும் பணிகள் நடைபெற்றது.
இதன் தொடக்கமாக காமன்தொட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட சப்படி அருகில் உள்ள தின்னூர் ஏரிகரையில் சில்வர்ஹூக், நல்லி, புங்கன் மற்றும் பாதாம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வன சரகர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்களை கொண்டு நடப்பட்டன.
மேலும் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவே கானந்தன், ஜேம்ஸ்குமார், உமாசங்கர், காமராஜ், முருகன், வெங்கடேசன் மற்றும் சூளகிரி வனசரகர் தவமுருகன் மற்றும் ஊழியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மூலம் ஆரஞ்சு, சாத்துகுடி, பட்டர் புரூட், வாட்டர் ஆப்பிள், பாதாம், கொய்யா மற்றும் தென்னை கன்றுகள் உட்பட சில்வர் ஹூக் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.
சூளகிரி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சுமார் 3800 மரக்கன்றுகள் நட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
- கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.
- காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அச்சிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசா (வயது24). இவர் தளியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கணேசன் (25). உறவினர்களான இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணேசன், அவரது நண்பர்கள் கீச்சானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமு (28), வேணு (18), விஜய் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.
இதில் காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சீனிவாசா தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன், ராமு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்களை கொடுத்தனர்.
- முதல்கட்டமாக ரூ.2 லட்சம் மதிப்பில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.1,500 வீதம் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் பிரெய்லி கைகடிகாரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பர்கூர் தாலுகா ஜெகதேவி அருகே கொட்டாவூர் கிராமத்தில் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுவிற்கு முதல்கட்டமாக ரூ.2 லட்சம் மதிப்பில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் சுமார், 100 -க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
- மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேரு யுவகேந்திரா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த சிறுதானிய உணவு விழாவை நடத்தியது. மாவட்ட கலெக்டர் சரயு விழாவை தொடங்கி வைத்து, சிறந்த முறையில் சிறுதானிய உணவு தயாரித்த, 6 அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்களும், வட்டார அளவிலான குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு கேடயங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார், 100-க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில், 250 நபர்களும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நேரு யுவ கேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் குன்முகமது, மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத் குமார், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






