என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்களை கொடுத்தனர்.
- முதல்கட்டமாக ரூ.2 லட்சம் மதிப்பில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.1,500 வீதம் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் பிரெய்லி கைகடிகாரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பர்கூர் தாலுகா ஜெகதேவி அருகே கொட்டாவூர் கிராமத்தில் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுவிற்கு முதல்கட்டமாக ரூ.2 லட்சம் மதிப்பில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






