என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக மாணவிகளிடமும் சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
    • விசாரணைக்கு ஆஜராகும் பயிற்சி மாணவர் ஹரீஸிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் மூகாம்பிகா கல்லூரியில் படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவ மாணவி சுகிர்தா விடுதியில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக மாணவிகளிடமும் சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஹரீஸ், ப்ரீத்தி ஆகியோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர்.

    இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த பரமசிவத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் பரமசிவம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து ஹரீஸ், ப்ரீத்தியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் ஹரீஷ், ப்ரீத்தி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்ட னர். இந்த நிலையில் முதல் கட்டமாக பயிற்சி மாணவர் ஹரீசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஹரீசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருகிற 7-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

    விசாரணைக்கு ஆஜராகும் பயிற்சி மாணவர் ஹரீஸிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். மாணவி சுகிர்தா தற்கொலை குறித்த விவரங்கள் மற்றும் அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ப்ரீத்தியிடம் அடுத்த கட்டமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.
    • சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை

    மார்த்தாண்டம் :

    நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான 19-வது கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புனித அல்போன்சா கல்லூரி மாணவர் நிஷாந்த் 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.

    தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் நிஷாந்தையும், இத்தகைய சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் உடற்பயிற்சி இயக்குனர்கள் ஏ.பி.சீலன் மற்றும் பி.அனிஷா ஆகியோரை கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் மற்றும் பேராசிரி யர்கள் வாழ்த்தினர்

    • பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    திருவட்டார் :

    குமரி மேற்கு மாவட்டம் திருவட்டார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குலசேகரத்தில் நடை பெற்றது. ஒன்றிய செயலா ளர் குற்றியார் நிமால் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ஜெஸ்டின்ராஜ் முன்னிைல வகித்தார். அமைப்பு செயலாளர் சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்ஷன், ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் அண்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் கிளை செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் என 69 பேர் வீதம் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொரு வீடுதோறும் சென்று அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    கட்சியின் பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கி றாரோ அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    அனைத்து கட்சி நிர்வாகிகளும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் முழு மூச்சாக கட்சி பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.

    • கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது.
    • மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    மணவாளக்குறிச்சி ;

    வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந் துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி மற்றும் கலைவிழா நடை பெற்றது. இந்த விழாவை திருவனந்தபுரத்தை சேர்ந்த திரைப்பட நடிகையான அன்கிதா வினோத் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது மாணவிகள் வேலையில்லாதவராக இல்லாமல் சுயதொழில் தொடங்குவோராக மாற வேண்டும். இதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படு கிறது என கூறினார்.

    கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். இந்த கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவி கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளுக்கிடை யிலான நடனப்போட்டி நடை பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்க ளையும் கல்லூரியின் தாளாளர் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் டி.ஜே. இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை தாளாளர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்கு னர் தருண் சுரத், துறை தலைவர்கள், பேரா சிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் ;

    கன்னியாகுமரி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் பார்வதிபுரம் ஈடன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தினக்ஷ் குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். 2-ம் இடத்தை கிறிஸ்டோ வில்மோகன் பெற்றார்.

    பெண்கள் பிரிவில் அனிலா பானு வெற்றி பெற்றார். 19 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் வைஷ்ணவி, ஆண்கள் பிரிவில் தருண், 17 வயதிற்குட்பட்டோர்களில் டிரிபோன்ஸா, தருண் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஒய்.எம்.சி.ஏ.தலைவர் டட்லிபென், செயலர் ரஞ்சித் அம்பலோஸ், விஜயகுமரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்துக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் ;

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்துக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதற்கு லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவி கட்டித்தங்கம் மணிவர்ண பெருமாள் தலைமை தாங்கி னார். ஊராட்சி செயலாளர் மணிகண்ட இசக்கி வரவேற்புரையாற்றினார்.

    வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவி யம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மங்கை யர்க்கரசி, மாவட்ட பஞ்சா யத்து கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் அனிதா, அஜந்தா, கிராம அதிகாரி வைகுண்டராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்தியாகு ரேமோ ஷன் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், உள்ளாட்சி துறை அதிகாரிகள்,

    அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் எஸ்.டி.வேலு ஜான்சன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெரு மாள், முன்னாள் துணை தலைவர் தங்கையா உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பஞ்சாயத்து வளர்ச்சிக்காக சிறந்த சேவையாற்றி யவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவி கட்டித்தங்கம் மணிவர்ணபெருமாள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
    • எழுத்தாளர்-கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உத்தரவிட்டார். அதில், "எழுத்தாளர்-கலைஞர்" குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், கருணாநிதியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரது பன்முகத் தன்மையினை எடுத்து சொல்லும் வகையில், எழுத்தாளர்-கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டு உள்ளது.

    இந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த முத்தமிழ் தேர்அலங்கார ஊர்தி பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோணப்பூங்கா அருகில் இன்று காலை நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டி அலங்கார ஊர்தி பயணத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் முத்தமிழ் தேர் உள்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்த்து ரசித்தனர்.

    "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சீரோ பாய்ண்ட், பழத்தோட்டம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வழியாக அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி சென்னை சென்றடைகிறது.

    தொடக்க விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூகத்துறை ஆணையர் அமுதவல்லி நன்றி கூறினார்.

    • சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடந்தது
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்

    நாகர்கோவில் ;

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் கவின் நுண்கலை மன்ற ஆண்டு விழா நடைபெற்றது. குழித்துறை கத்தோலிக்க மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேராசிரியை சிமிமோள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாரதி கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமிழ்மொழி சிறப்பு குறித்தும், அனைவருக்கும் படிப்பு முதன்மையாக இருக்கவேண்டும் என்றும் எடுத்து கூறினார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் மலையாள திரைநட்சத்திரமுமான நலீப் ஜீயோ விழாவில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் கல்லூரி தாளாளர் மரியவில்லியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கலைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள். விழாவில் கவின் நுண்கலை மன்ற மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பேராசிரியர் ெஜய சுரேண்ராஜ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரியவில்லியம், முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • விதவிதமான அழகு தாவரங்கள் 200-க்கும் மேற்பட்ட வகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன.
    • தீபாவளியையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி கே.பி. ரோட்டில் தென்னை நார் கயிறு கூட்டமைப்பின் ஈத்தாமொழி எக்ஸ்க்ளூசிவ் என்ற ஷோரூமில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் அழகு தாவர செடிகள் மற்றும் தென்னை நார் தேங்காய் சிரட்டை ஆகிய வற்றில் உருவாக்கப்பட்ட தீபாவளி அன்பளிப்பு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் இயற்கை மெழுகு தீபங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் விதவிதமான அழகு தாவரங்கள் 200-க்கும் மேற்பட்ட வகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. தீபாவளி பண்டிகையை யொட்டி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட தொட்டிகளுடன் விதவிதமான வீட்டுக்குள் வளர்க்கப் படும் அழகு தாவர செடிகள் இங்கு விற்பனைக்கு குவிந்துள்ளன.

    வீட்டிற்குள் வர வேற்பறை, முக்கிய அறை, படுக்கையறை, பூஜையறை, போர்டிகோ உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்க வசதியாக தொட்டிகளில் வளர்க்கப்படும் இந்த செடிகள் மனதிற்கு மகிழ்ச்சி யையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

    இந்த செடிகள் வளர தென்னைமர தூள்கள் கொண்டும் இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் கொண்டும் ரசாயன பொருட்கள் இல்லாமல் அமைக்கப்பட் டவை ஆகும். குறைந்த அளவு தண்ணீரில் இவை வளர்க்கப்படுகின்றன.

    தமிழர்களின் கலாச்சா ரங்களை வெளிப்படுத்தும் விதமாக மண் தொட்டிகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இந்த வீட்டுக்குள் வளர்க்கப் படும் தோட்ட செடிகளை மேலும் அழகாக்கின்றன.

    தீபாவளியையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி கொள்ளும்படி அதன் உரிமையாளர் சிஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.

    • டாக்டர். ஐசக் சுந்தர்சென் தகவல்
    • நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் டாக்டர் ஐசக் விபத்து மற்றும் எலும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. தற்போது இங்கு அதி நவீன சிகிச்சை மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் தலை மை மருத்துவ நிபுணருமான டாக்டர். ஐசக் சுந்தர்சென் தெரிவித்ததா வது:-

    டாக்டர் ஐசக் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு, தோள்பட்டை மூட்டு மற்றும் கை முழங்கை மூட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் துபாய், ஓமன், மாலத்தீவு போன்ற நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதற்கான அல்ட்ரா மாட்யூல் கிருமி தொற்றினை தடுக்கும் முறையில் அமைந் துள்ள லேமினார் பிலோ அறுவை சிகிச்சை அரங்கு களுடன் மருத்துவ குழுவின ரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் நோயா ளிக்கு வலி இல்லாமல் இருக்க நெர்வ் பிளாக் முறை கையாளப்பட்டு வரு கிறது. நோயாளிகள் அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே வலிகள் எதுவும் இல்லாமல் எழுந்து நடக்கக் கூடிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறையான பயோ பாண்ட்சிவ பினிஸ் தி நோ அலர்ஜினீ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கான நவீன கருவி வரவழைக்கப் பட்டு இந்த சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சை மூலம் நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்படாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.
    • சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், நவ.4-

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரு வழி சாலை தற்பொழுது உள்ளது. இங்கு இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் திருவனந்த புரத்திற்கு சென்று வருவ தால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து நான்கு வழி சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இத ற்காக ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. நிலம் கையகப்படு த்தும் பணி நடைபெற்றதை தொடர்ந்து சாலை அமை க்கும் பணி மேற்கொ ள்ளப்பட்டது. பல்வேறு இடங்களில் இந்த பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் மணல் கட்டுப்பாடு காரணமாக பணி கிடப்பில் போடப்ப ட்டது.

    நான்கு வழி சாலை பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. மத்திய மந்திரி யிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ண னும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தார். இந்த நிலை யில் சாலை பணியை மீண்டும் தொட ங்க நடவ டிக்கை எடுக்க ப்பட்டது. வேறு மாவட்ட த்திலிருந்து மணல் கொண்டு வந்து சாலை பணியை தொடங்க நட வடிக்கை மேற்கொண்ட னர். தற்பொழுது நான்கு வழி சாலை பணியில் ஒரு சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 64 இடங்களில் சிறிய பாலங்கள் அமைக்க வேண்டி யது உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் அருகே ரெயில்வே மேம்பா லம் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சாலையையும், பாலத்தையும் இணை க்கும் வகையில் இருபுறமும் மணல்கள் நிரப்பப்ப டாத நிலை இருந்து வருகிறது. மணல் தட்டுப்பாடு காரண மாக பல மாதங்களாக மணல் நிரப்பப்ப டாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த பாலத்தை யும், சாலையையும் இணைக்கும் வகை யில் இருபுறமும் மணல்கள் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து மேற்கொள்ளலாம். ஏற்க னவே பொற்றைய டியில் இருந்து புத்தேரி வரை பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது. இந்த பாலம் மட்டுமே தற்பொழுது மணல் நிரப்பப்படாமல் உள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. அந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து தொடங்கி விடலாம். நாகர்கோ வில் நகருக்கு வரும் மக்கள் இந்த சாலை வழியாக வருவதற்கு வசதி யாக அமையும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நான்கு வழிச்சாலையையும், பால த்தையும் இணைக்கும் வகையில் மணல் நிரப்பு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தடுப்புக்கற்கள் அமைக்க ப்பட்டு மணல்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணி முழுமை பெறும் பட்சத்தில் அந்த வழியாக போக்கு வரத்து தொடங்கப்படும். மேலும் மற்ற இடங்களிலும் நான்கு வழி சாலை பணியை புனிதமாக முடிக்க அதிகா ரிகள் நடவடிக்கை மேற்கொ ண்டு வருகிறார்கள். பாலம் அமைக்க வேண்டிய இடங்க ளில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை களும் எடுக்க ப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் நான்கு வழிசா லை பணியை முழுமை யாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது
    • ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மார்த்தாண்டம், நவ.4-

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் பாலூர் தேவா தலைமை தாங்கினார். துணை செயலாளர் துரைராஜ், பொருளாளர் தங்கதுரை, மத்திக்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜெனோ, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜெப ஜான், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், எஸ்.எம்.கான், மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கின்ற முகாம்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து பூத் முகவர்களும் தங்களுடைய பூத்களில் சென்று பணி செய்வதென்றும், நலிவடைந்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    ×