என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக சானலில் தண்ணீர் விடவில்லை
    • முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். கன்னிப் பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது.

    அணை பாசனத்தை நம்பியும் குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி செய்தனர். 6000 ஹெக்டேரில் மாவட்ட முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பல்வேறு பகுதிகளில் அறுவடைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.ஆனால் ஒரு சில பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளன.

    ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக தோவாளை சானலில் தண்ணீர் விடவில்லை. தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை போர்க்கால அடிப்படையில் கடைமடை பகுதியில் வரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடு என சரிந்து வருகிறது. பேச்சிபாறை நீர்மட்டம் இன்று காலை 17.65 அடியாக உள்ளது.அணைக்கு 381 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.75 அடியாக உள்ளது.அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் நீர்மட்டம் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க பாசன குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகளில் கவலை ஏற்படுத்தி உள்ளனர்.

    • குடிப்பழக்கத்தை கணவர் கைவிட மறுத்ததால் விபிரீத முடிவு
    • கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள பரசேரி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபா லட்சுமி (25). இந்த தம்பதி யினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தற்போது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்காக மருத்து வரிடம் சிகிச்சையும் ஆலோ சனையும் பெற்று வந்தார். அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், இதனால் வேலைக்கு செல்லாமலும் குடும்பத்தை கவனிக்காம லும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஓணம் விழாவையொட்டி வெளியே சென்ற அய்யப் பன், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை மனைவி சுபாலட்சுமி பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அய்யப்பன் போனை எடுத்துப் பேசாமல் இருந்துள்ளார்.

    இதனால் மன வருத்த மடைந்த சுபாலட்சுமி வீட்டில் நேற்று இரவு தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார். அவரது குழந்தை அழுகுரல் கேட்டு உள்ளே சென்று பார்த்த உறவினர்கள், சுபாலெட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சுபாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் குடி பழக்கத்தால் சுபாலட்சுமி தற்கொலை செய்து கொண்டு இருப்பது போலீ சாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்பட்டன.
    • உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த 2 மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கணக்கர் கண்ணதாசன், பொருளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப் பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில்பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்தனர்
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் பேரூராட்சி, வேங்கோடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அபிஷேக் மற்றும் ஆகாஷ் தலைமையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால்சிங், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர்

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 67). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது வீட்டருகே குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் அந்தோணியார் குருசடி உள்ளது.

    இதில் சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு குருசடி பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. உடனே பெஞ்சமின் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு பெரியவிளையை சேர்ந்த வின்சென்ட் மகன் ஸ்டாலின் (43) அங்கிருந்த 2½ மற்றும் ஒரு அடி உயர சிலைகளை உடைத்து சேதப்படுத்தி, அங்கு வைத்திருந்த உண்டியலையும் பணத்துடன் எடுத்துச் சென்று விட்டான். இதுகுறித்து பெஞ்சமின் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர். போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • மேம்பாட்டு நிதியில் ரூ.11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார்

    இரணியல் :

    திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு தலக்குளம் புதுவிளையில் உள்ள அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து தரைத் தளம், மேல் தளம் என அங்கன்வாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரீத்தம்மாள், 13-வது வார்டு கவுன்சிலர் பீட்டர்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஐய்வசந்த் எம்.பி புதிய கட்டிடத்தை ரிபன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி உதயம், குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நண்பரை கொன்றவர் வாக்குமூலம்
    • இசக்கி முத்து மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    நாகர்கோவில்,ஆக.30-நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார்(22). இவர் தொழில்நுட்ப பயிற்சி முடித்துவிட்டு வெளிநாடு செல்ல தயாரானார்.

    இந்த நிலையில் இவருக்கும் இவரது நண்பராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து(25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து ஸ்க்ரூ டிரைவரால் மனோஜ் குமாரின் கழுத்தில் குத்தினார்.

    படுகாயம் அடைந்த மனோஜ்குமாரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் குமார் பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் இசக்கி முத்து மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    சாத்தான்குளம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இசக்கி முத்துவை வடசேரி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கிமுத்துவை போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர் கூறுகையில். கடந்த தீபாவளி தினத்தன்று மதுபோதையில் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனோஜ் குமார் காயம் அடைந்தார். பின்னர் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நான் மனோஜ் குமாரை தாக்கியதால் அவரை என்னை பழிவாங்க காத்திருந்தார்.சம்பவத்தன்று மனோஜ் குமார் கத்தியுடன் என்னை தாக்க வந்தார்.

    நான் அவரை கையில் இருந்த ஸ்குருடிரை வால்குத்தினேன் என்றார்.இதையடுத்து போலீசார் இசக்கி முத்துவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் இன்று நடந்தது.
    • மாநில மாவட்ட வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் இன்று நடந்தது.

    அதன்படி கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டுவதற்கான அடிக்கல்லை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நாட்டினார்.

    கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.டி.உதயம், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஜெசிங், கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் திரு. மனோகர சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. லாரன்ஸ், திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் மாநில மாவட்ட வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு அரசு பஸ் வந்து சென்றது.
    • சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் ஏராளமான பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பஸ்கள் அடிக்கடி சாலையில் நடுரோட்டில் பழுதாகி நிற்கும் நிலை உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு அரசு பஸ் வந்து சென்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இருந்தனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதையடுத்து பஸ்சில் இருந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சை விட்டு இறங்கி பஸ்சை தள்ளினார்கள்.

    அப்போது இதை ஒருவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் பஸ்சை தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பஸ்சில் இருந்து பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை தள்ள வைத்தது தவறு என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

    சம்பந்தப்பட்ட பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்டு செய்து நாகர்கோவில் போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நடுரோட்டில் பழுதாகி நின்ற பஸ்சை பராமரித்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து 2 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    பழுதான அரசு பஸ்சை கல்லூரி மாணவர்கள் தள்ளிய விவகாரத்தில் டிரைவர்-கண்டக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது குமரி மாவட்ட போக்குவரத்து ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது
    • அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமை ந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட்டது. ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.விழாவை யொட்டி அனைத்து துறை மாணவ-மாணவிகளும் புத்தாடை அணிந்து, ஊஞ்ச லாடி, இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    மேலும் அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது. விழாவில் கல்லூரி துணை தலைவர் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.
    • அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.

    குளச்சல் :

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் மாவட்டம் அருவிக் கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க கிளை அமைப்ப தற்கு அருவிக்கரை பிரமுகர் அஜீஸ் குளச்சல் நகர அ.தி.மு.க அலுவலகத்தில் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமு கராஜா ஆகியோரிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லுக்கூட்டம் பேரூர் செயலர் வக்கீல் அகஸ்டின், மண்டைக்காடு பேரூர் செயலாளர் விஜயகுமார், குளச்சல் நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வினோத், நகர இளைஞர் பாசறை செயலாளர் மலுக்கு முகமது மற்றும் மரியலூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவனந்தபுரம் அருவிக்கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.

    • கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்று தாயும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பியை அடுத்த பூங்கோடு செங்கோடி கிராமத்தை சேர்ந்தவர் யேசுதாஸ் (வயது 52), கட்டிட தொழிலாளி.

    இவரது மனைவி சீமா (38). மகன்கள் கெவின் (15), கிஷான் (7). 2 பேரும் ஆற்றூர் அருகே ஒரு பள்ளியில் படித்து வந்தனர். கெவின், 10-ம் வகுப்பும், கிஷான் 2-ம் வகுப்பும் படித்தனர். அவர்கள் 2 பேருக்கும் நரம்பு பிடிப்பு பாதிப்பு இருந்துள்ளது.

    இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். இருப்பினும் நோய் பாதிப்பு சரியாகவில்லை. இது சீமாவுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அவருக்கும் கணவர் யேசுதாசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

    நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு யேசுதாஸ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். சீமா தனது 2 மகன்களுடன் வீட்டின் கதவை அடைத்து விட்டு படுத்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்து தான் புகை வருவது தெரியவந்தது.

    அந்த அறையும் உள்பக்கம் பூட்டப்பட்டே இருந்தது. அதனையும் உடைத்து உள்ளே சென்றவர்கள் அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர். மகன்கள் கெவின், கிஷானுடன் சீமா படுக்கையில் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளார். இந்த சூழலில் திருவட்டார் போலீசாரும் அங்கு வந்தனர். அதே நேரம் இரவில் வெளியே சென்ற யேசுதாசும் தகவல் கிடைத்து அலறியடித்து அங்கு வந்தார்.

    பின்னர் அனைவரும் சேர்ந்து, தீயில் கருகி கிடந்த தாய்-மகன்களை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கிஷான் பரிதாபமாக இறந்தான். கெவின் மற்றும் சீமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் மகன்களுக்கு நரம்பு பிடிப்பு நோய் இருந்ததால் சீமா மிகுந்த மன வேதனையில் இருந்ததும், கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. நேற்று இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டது அவருக்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் சீமா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மகன்கள் படுக்கையில் தூங்கிய நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து அவர்கள் மீதும் தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்று தாயும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×