என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவனந்தபுரம் அருவிக்கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க. கிளை அமைக்க விண்ணப்ப படிவம்
- புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.
- அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.
குளச்சல் :
கேரள மாநிலம் திருவ னந்தபுரம் மாவட்டம் அருவிக் கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க கிளை அமைப்ப தற்கு அருவிக்கரை பிரமுகர் அஜீஸ் குளச்சல் நகர அ.தி.மு.க அலுவலகத்தில் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமு கராஜா ஆகியோரிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கல்லுக்கூட்டம் பேரூர் செயலர் வக்கீல் அகஸ்டின், மண்டைக்காடு பேரூர் செயலாளர் விஜயகுமார், குளச்சல் நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வினோத், நகர இளைஞர் பாசறை செயலாளர் மலுக்கு முகமது மற்றும் மரியலூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவனந்தபுரம் அருவிக்கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.
Next Story