என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டிடம்- அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த் எம்.பி.
- அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் இன்று நடந்தது.
- மாநில மாவட்ட வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் இன்று நடந்தது.
அதன்படி கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டுவதற்கான அடிக்கல்லை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நாட்டினார்.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.டி.உதயம், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஜெசிங், கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் திரு. மனோகர சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. லாரன்ஸ், திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் மாநில மாவட்ட வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






