என் மலர்
கன்னியாகுமரி
- 1 கோடி 6 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்பதே உண்மை.
- பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சமஉரிமை ஆகியவற்றில் தமிழ் நாடு என்றுமே எடுத்து காட்டாக விளங்கி உள்ளது.
பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், யாரையும் சார்ந்து வாழ தேவையில்லை என தமிழக பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பெயரே மிக சிறப்பானது. இது மகளிர் உதவி தொகை அல்ல. இது அவர்களின் உரிமை தொகை.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 கோடியே 6 லட்சம் பெண்கள் இதனால் பயனடைய போகிறார்கள் என்பது கணக்கு. 1 கோடி 6 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்பதே உண்மை.
பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சம உரிமை ஆகியவற்றில் தமிழ் நாடு என்றுமே எடுத்து காட்டாக விளங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் உரிமைகளும் வழங்கி உள்ளது. இந்த தொகை மகளிர் கையில் இருந்தால் பெண்கள் தங்கள் தேவைகளுக்கு கணவனையோ பிள்ளைகளையோ நாட தேவையில்லை.
தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்து அதை இன்று நிறைவேற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மக்கள் சார்பாக நன்றி. சட்டமன்ற தேர்தலுடன் நானும் தேர்தலை சந்தித்தேன். ஆதலால் இந்த வாக்குறுதி எனக்கும் பொருந்தும்.
இந்த உரிமை தொகை வாயிலாக பயன் பெறும் அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் செழிக்க வாழ்த்துவதாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
- அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ளது
நாகர்கோவில் : அண்ணா பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் அக் ஷயா கண்ணன், ஆரல்வாய் மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி, தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மோசமா கியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடங்கி யதில் இருந்து நெய் இருந்தாலும் சரி, எண்ணெய்யாக இருந்தாலும் சரி விலை ஏற்றுவதில் முதல்-அமைச்சருக்கு நிகர் எவரும் கிடையாது.
ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் மிரட்டி பாலை ஆவினுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையில் பால் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆவினை மூடுவதற்கான வழிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்த பென்ஷன் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இதுதொடர்பாக தெளிவாக சொல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ராகவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் சவுமியா, துணை செயலாளர் ரூபா, பொதுக்குழு உறுப்பினர் சகாய டெல்வர், துணை செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தினேஷ் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது
- 2000 பயனாளிகளுக்கு கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பேசினார்
நாகர்கோவில் : கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சி வட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
விழாவில் 2000 பயனாளிகளுக்கு கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-சென்னையில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நான் சென்றேன். சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்தில் ஒரு வயதான அம்மா இருந்தார். அவருடைய பிள்ளைகள் அவரை கோவிலில் விட்டுவிட்டு சென்று விட்டனர். கோவில் அன்னதானம் சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் இதுபோன்று அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 13 அல்லது 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஒரு காலத்தில் கணவன் இறந்துவிட்டால் அந்த சிதையிலே மனைவியும் போட்டு எரிக்க வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் உரிமை கிடையாது. பெண் கேள்வி கேட்கக்கூடாது. ஆளுகின்ற எந்த பொறுப்புக்கும் பெண் வரக்கூடாது. இப்படி எல்லாம் இருந்தது. குமரி மாவட்டத்தில் தான் பெண்கள் முறையான ஆடை அணிவதற்கு உரிமை கோரி போராடினார்கள்.
பெண்கள் சமூகத்தில் சமநிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைபெண் திட்டத்தை தொடங்கினார்கள். நாட்டில் பெண்கள் படித்துவிட்டு உயர் கல்விக்கு செல்வது 24 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 72 சதவீதம் பெண்கள் உயர்கல்வி செல்கிறார்கள்.
நாடும், உலகமும் நம்மை திரும்பி பார்க்கின்ற அளவிற்கு நம்முடைய பெண்கள் இன்றைக்கு அதிகாரபடுத்தப்பட்டு உள்ளார்கள். மேலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணமும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீபா ஆல்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கலைஞர் உரிமை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தாலும் நேற்று பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1000-ம் கிரெடிட் ஆனது
- பெண்கள் மகிழ்ச்சியடைந்து உற்சாகமடைந்து உள்ளனர்
நாகர்கோவில்: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். கலைஞர் உரிமை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தாலும் நேற்று பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1000-ம் கிரெடிட் ஆனது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் வங்கி கணக்கில் வந்ததையடுத்து பெண்கள் மகிழ்ச்சியடைந்து உற்சாகமடைந்து உள்ளனர். சில பெண்கள் இன்றே வங்கிகளுக்கு சென்று பணத்தை பணத்தை எடுத்தனர்.
கலா, குலசேகரம் : நான் கூலி வேலை செய்து வருகிறேன். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாதம் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். தற்பொழுது அதற்கான பணம் எனது வங்கி கணக்கில் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆயிரம் பணம் எனது சொந்த செலவுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.எனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கபாய், மணலி விளை : எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. நான் தற்பொழுது தனியாக வசித்து வருகிறோம். எனது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். தற்பொழுது இந்த உதவித்தொகை மருத்துவ செலவு மட்டும் இன்றி மற்ற செலவுகளுக்கும் உதவியாக இருக்கும்.எனவே முதல்-அமைச்சருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவராக இருப்போம்.
சத்யா தேவி, வடசேரி: தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை நிறைவேற்றியது. தற்பொழுது மேலும் ஒரு திட்டமாக கலைஞர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி யுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்க னவே மகளிருக்கு இலவச பஸ் பயண த்தை செயல்படுத்தியதன் மூலமாக நாங்கள் இலவசமாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த பஸ்சில் பயணம் செய்கிறோம்.தற்பொழுது ரூ.1000 மாதம் தோறும் வழங்கி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை இந்த பணத்தின் மூலம் வாங்கி கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
கவிதா, வடசேரி : தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகி றார். பெண்கள் நலனே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வரு கிறது. தற்பொழுது ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நன்றி தெரிவி த்துக்கொள்கிறேன்.
கனகம், நாகர்கோவில் வயல்தெரு: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தி ற்கான ரூ.1000 பணம் நேற்றே வங்கிக் கணக்கில் வந்துவிட்டது. மாத மாதம் இந்த தொகை கிடைக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து மாதமும் பணத்தை வங்கி கணக்கில் வழங்கினால் உதவிக ரமாக இருக்கும். இந்த அரசுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருப்போம்.
சசிரேகா, வைத்தியநாதபுரம்: தி.மு.க. அரசு ஏற்கனவே மகளி ருக்கு இலவச பஸ்களை இயக்கி வரு கிறது. தற்பொழுது மாதம்ரூ.1000 வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. பெண்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு விளங்கி வருகிறது. இது ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பணம் எங்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு பயன் உள்ளதாகவும் அமைந்துள்ளது.
விஜிலா, பூந்தோப்பு: மகளிர் உரிமை தொகை ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை எந்த ஒரு முதல்-அமைச்சரும் செய்யா ததை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் செய்துள்ளார். இந்த தொகை வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த தொகை தெய்வின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது
- மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்
நாகர்கோவில் : கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. இளையோர் திறன் மேம்பாட்டு என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்கில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் தலைமை உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆேராக்கியசாமி வாழத்துரை வழங்கினார். துைண முதல்வர் சிவனேசன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரி வணிக வியல் துறை பேராசிரியர் மதன்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசி, பயிற்சி குறிப்பேடுகளை வழங்கி பயிற்சி அளித்தார். இதில் வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.
- உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும்
- நோயாளியின் கையில் ஒரு சிறு துளை மூலம் அவசர ஆஞ்சியோகிராம் செய்து
நாகர்கோவில் :மேல ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த பூ தங்கம் (வயது 68). இவர் மாரடைப்பு காரணமாக நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை இருதயவியல் நிபுணர் மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் நோயாளியை பரிசோதித்து விட்டு உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள்.
இதையடுத்து நோயாளிக்கு மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளியின் கையில் ஒரு சிறு துளை மூலம் அவசர ஆஞ்சியோகிராம் செய்து இருதயத்தில் உள்ள 3 ரத்தக்குழாயில் 5 அடைப்புகள் உள்ளது என கண்டறிந்தனர். பொதுவாக இவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால் நோயாளியின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் திடீரென மாரடைப்பு ஏற்படலாம். எனவே ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்க உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. 3 ரத்த குழாயில் உள்ள 5 அடைப்புகள் 3 கம்பிச்சுருள் கொண்டு பொருத்தப்பட்டது. மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் மற்றும் இருதயவியல் மருத்துவ குழு இணைந்து நோயாளியின் உயிரை காப்பாற்றினர். தற்போது நோயாளி நல்ல முறையில் வீடு திரும்பினார். மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையிலும், சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை ஆகிய மருத்துவமனையில் பணிபுரிந்து விட்டு தற்போது பொன் ஜெஸ்லி மருத்துவ மனையில் முழு நேர இருதயவியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.நோயாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் மற்றும் இருதயவியல் மருத்துவ குழுவினருக்கு நோயாளியின் உறவினர்கள், சக மருத்து வர்கள், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரி வித்தனர்.
- பயணம் செய்ததற்கு போதுமான ரெயில் வசதிகள் இல்லை
- வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்
நாகர்கோவில் : விஜய் வசந்த் எம்.பி. தென்னக ரெயில்வே முதன்மை இயக்க மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீகுமாரிடம் நேரில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு பயணம் செய்ததற்கு போதுமான ரெயில் வசதிகள் இல்லை.மேலும் குமரியிலிருந்து சென்னைக்கு மாணவர்கள், நோய் வாய்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக அதிகம் பேர் செல்கின்றனர்.
நாகர்கோவில்-சென்னை இடையே மிக அதிகமாக பயணிகள் ரெயில் மூலம் வருவதால் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை-திருநெல்வேலி இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ள 20631/20632 வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.தென் தமிழக மக்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்வதற்கு வசதியாக ைஹதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரிக்கு பார்சல் சர்வீஸ் வேனில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக
- 90 கிலோ போதை புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்த னர்
நாகர்கோவில் : பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பார்சல் சர்வீஸ் வேனில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின்சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அந்த சிறப்பு தனிப்படை போலீ சார் நேற்று மதியம் கன்னியாகுமரி ரத வீதியில் உள்ள ஒரு பார்சல் நிறுவனத்துக்கு வரும் பார்சல் சர்வீஸ்வேன்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வேனில் இருந்து ஒரு பண்டலை ஒருவர் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு மறைந்தி ருந்த சிறப்பு தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து அவர் வைத்திருந்த பண்டலை சோதனை செய்தனர். அப்போது அதில் 90 கிலோ தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த 90 கிலோ போதை புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்த னர். இதைத் தொடர்ந்து அதனை கடத்திக் கொண்டு வந்த வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில்அவர் நாகர்கோவில் பி.டபிள்யூ.டி.ரோட்டைச் சேர்ந்த ஜான் மார்க்கோனா (வயது53) என்பதும் அவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் பலசரக்கு கடை நடத்திய வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து
நாகர்கோவில் உள்ள கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
- ராஜஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
மார்த்தாண்டம்:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள மத்திக்கோடு எல்.எம். அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அந்த பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து வகுப்பறை கட்டிடங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிள்ளி யூர் கிழக்கு வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், வார்டு உறுப்பினர்கள் ஹெலன் மேரி, மேரி பிரிதா, பாலப்பள்ளம் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், மற்றும் சூசை மிக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாலமோர் ரோட்டில் இரு பக்கமும் 10 அடி அகலப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், வணிகர்கள், கடை உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளனர். அப்போது சாலையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக 10 அடி அகலத்தில் இடத்தை விட்டு கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். மேலும் பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலையை விரிவுபடுத்த இடம் தரவில்லை என்றால் கட்டிடத்தின் மேல் நகர் ஊரமைப்பு திட்டம் 56, 57-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்கள் கட்டிட உபயோகம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.மேலும் இடத்தை விட்டு தர வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்கள் சம்ம தித்து விட்டதாக உண்மைக்கு மாறாக வெளியிட்டுள்ளார்கள். சாலை விரிவாக்கத்திற்கு இடம் விட்டு தர மாட்டோம் என்று வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கூறவில்லை. மேற்கண்ட இடத்திற்கான இட மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கினால் அவர்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள்.
அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு மேற்கண்ட சாலையினை அகலப்படுத்துவதற்கு தேவையான இடத்திற்குரிய இன்றைய மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையினை அனுமதித்து வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எச்எம்எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
- மாநில செயல் தலைவர் எம்.சுப்பிரமணி பிள்ளை வரவேற்றார்.
நாகர்கோவில்:
ஹிந்த் மஸ்தூர் சபா (எச்எம்எஸ்) வின் 75-ம் ஆண்டு பவள விழா மாநாடு இன்று நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்தது. எச்எம்எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செயல் தலைவர் எம்.சுப்பிரமணி பிள்ளை வரவேற்றார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எச்எம்எஸ் தேசிய பொதுச்செயலாளர் ஹர்பஜன்சிங் சித்து கலந்துகொண்டு, மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார். தேசிய பொருளாளர் போஸ்லே, தேசிய செயலாளர்கள் சம்பா வர்மா, முகேஷ் ஹால்வ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநாட்டில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உணவு மருந்துகள் வேளாண் இடுபொருட்கள் மற்றும் எந்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைக்க வேண்டும். மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கொரோனாவால் பறிக்கப்பட்ட ரெயில்வே சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும். இலவச கல்வி, சுகாதாரம், தண்ணீர் மற்றும் உடல்நல உரிமை அனைவருக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தேசியக்கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.
அனைவருக்கும் வீடு வழங்குப்படு வதை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும். மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும். அனைத்து பண்ணை க்குடும்ப ங்களையும் கடன் சுமையிலிருந்து விடுவிக்க விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு நலவாரியத்தில் இருந்து நிதி பங்களிப்போடு இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி கிராமபுற வேலை உறுதி சட்டத்தின்படி ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்கும் வகையில் திட்டத்தை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்டத் தொ குப்பு களை யும் திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார்.
- பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார்.
நாகர்கோவில்:
மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம், தமிழக மாநில பிரிவு சார்பில் நடைபெற்ற பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார். 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார். இதில் இயக்கு நர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர்.
இதில் டாக்டர்கள் சுரேஷ் பாலன், கோபால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேவை யான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் துரித உணவு வகையின் தீமைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியனர். மாணவி அமிர்தா நன்றி கூறினார்.






