என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லாரை பகுதியை சேர்ந்தவர் சரண்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லாரை பகுதியை சேர்ந்தவர் சரண் (வயது 22). வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சரணை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சரண் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரித்ததில் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு கீழாண்டை தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் காஞ்சிபுரம் புதிய ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்த ஜீவா (20) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
- தங்கத்தை கடத்தி வந்தவர்கள், அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறைக்குள் அதனை மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகீம் (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அலி (30) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. மேலும் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரும் தங்கள் ஆடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 980 கிராம் தங்கம் மற்றும் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுபாப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் வந்து அந்த பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர்.
அந்த பார்சலில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 520 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறைக்குள் அதனை மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 6½ கிலோ தங்கம் மற்றும் லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- இருவரிடமிருந்து 1 கிலோ 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை ஒடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் தேனம்பாக்கம் வேதபாடசாலை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த செவிலிமேடு பகுதியை சேர்ந்த சபரி (வயது 26), தேனம்பக்கத்தை சேர்ந்த மதன் (22) ஆகியோரை அந்த வழியாக ரோந்து சென்ற தாலுகா போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் 1 கிலோ 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தமிழக அளவிலான 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பணியாளர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.
கூட்டுறவு சங்க பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை துவங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ. 10,000 வழங்க வேண்டும்.
பணியில் உள்ளவர்களுக்கு மாற்று ஒய்வுதியம், கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் ஜி.வைரப்பன் தலைமையில் நடத்தி வருகிறார்கள்.
அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தர்ணா போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் இ.அருணாசலம், மாநில கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் எஸ்.ஜினச்சந்திரன், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு மாவட்ட கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் எம்.யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஜி.மதியழகன் மற்றும் 25 கூட்டுறவு வங்கி பணியாளர்கள், தமிழக அளவிலான 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பணியாளர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.
- கேமிராவில் 3 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து திருடிச் செல்வது பதிவாகி உள்ளது.
- மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலத்தூர்:
மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டை என்.எஸ்.கே சாலையில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு பணப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் 3 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து திருடிச் செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கனகா வீட்டுக்கு வெளியே கிரில் கேட்டை பூட்டிவிட்டு வயலுக்கு மாட்டை ஓட்டி சென்றார்.
- படுக்கையறை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சித்தாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கனகா (வயது 68). நேற்று முன்தினம் இவரது மகன் சக்திவேல் மனைவியை பார்ப்பதற்காக குன்றத்தூர் சென்றுவிட்டார். கனகா வீட்டுக்கு வெளியே கிரில் கேட்டை பூட்டிவிட்டு வயலுக்கு மாட்டை ஓட்டி சென்றார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கிரில் கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் தனது மகன் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டுக்கு திரும்பி வந்த சக்திவேல் இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சேகரை ஆட்டோ டிரைவர்கள் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.
- காயம் அடைந்த போலீஸ் ஏட்டு சேகரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் அருகே இரவு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு சேகர் மீது ஆட்டோ மோதுவது போல் சென்ற 2 வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனை தொடர்ந்து ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மீண்டும் போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சேகரை ஆட்டோ டிரைவர்கள் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து காயம் அடைந்த போலீஸ் ஏட்டு சேகரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் ஏட்டு சேகர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் கஞ்சா போதையில் இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமதுசாதிக் (வயது24) மற்றும் தீபக் (28) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- செங்கல்பட்டு சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்.
செங்கல்பட்டு சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 41). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (52). இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் நோக்கி சென்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கூட்டு சாலையில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் கோபிநாத் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கோபிநாத் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரிமுத்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிமுத்துவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- குடும்பத் தகராறில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
- பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பம்மல், காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை நன்மங்கலம் ஏரியில் செல்வம் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் ஏரிக் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தது. அவர் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவள்ளூர் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இன்று காலை திருவள்ளூர் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்குவேன் திடீரென மோதியது. இதில் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
கூட்டுறவுத் துறை காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுதல் குறித்து கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.லட்சுமி தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான முருகன் முன்னிலை வகித்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்றுவது குறித்து நபார்டு வங்கியின் மாவட்ட விரிவாக்க அலுவலர் விஜய் நேஹா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர், பணியாளர் அலுவலர் மு.தயாளன், சரக துணைப் பதிவாளர்கள் த.சுவாதி, ம.சுடர்விழி, பா.ஐஸ்வர்யா வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர்கள், கள அலுவலர்கள், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் அலுவலர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.
- வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருவாடிப்பூரம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் ஆகியோருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, இரட்டைக் குடையுடன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






